படிகாரம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா.?

Advertisement

படிகாரம் தீமைகள் | Padikaram Stone Side Effects in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் படிகாரத்தின் தீமைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நம்மில் பலருக்கும் படிகாரம் பற்றி தெரிந்திருக்கும். பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு இதனை பயன்படுத்தி வருவார்கள். இதனால், அவற்றின் நன்மைகள் பற்றி தான் பெரும்பாலும் தெரிந்திருக்கும். அவற்றின் தீமைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில், படிகாரம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

படிகாரம் என்பது ஒரு வகையான உப்பு போன்ற பொருள் ஆகும். இது சமையலுக்கும் மருத்துவத்திலும் பயன்படுத்தும் பொருள் ஆகும். படிகாரம் நேபாளம், பீகார், பஞ்சாப் மற்றும் கத்தியவார் போன்ற பகுதிகளில் காணப்படும் மண் தாதுவிலிருந்து எடுக்கப்படுகிறது. இது இனிப்பு, துவரிப்பு சுவை கொண்டது. இது எகிப்து, இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் இந்தியாவில் காணப்படுகிறது.

படிகாரம் மருத்துவ பயன்கள்

படிகாரம் தீமைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:

படிகாரம் தீமைகள்

படிகாரத்தில் பல நன்மைகள் இருந்தாலும், ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. எனவே, படிகாரம் பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • சருமம் உலர்ந்து போகுதல் – சிலர் படிகாரத்தை முகத்திற்கு பயன்படுத்தி வருவார்கள். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் சருமம் ட்ரை ஆகி விடும்.
  • படிகாரம் பயன்படுத்தும் சிலருக்கு தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • அதிகமாக எடுத்துக்கொண்டால் படிகாரம், மயக்கத்தினை ஏற்படக்கூடும்.
  • கான்னசுற்றி வெள்ளைநிறத்தில் நீர் வடியும்.
  • தொண்டையில் இறுக்கமாக இருப்பது போல் தோன்றும்.
  • தோலில் அரிப்பு, எரிச்சல் போன்றவை உண்டாகும்.
  • உடலில் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
  • முகத்தில் வீக்கம் உண்டாகும்.
  • தொண்டையில் வீக்கம் ஏற்ப்படும்.
  • சுவாதிப்பதில் சிரமம் உண்டாகும்.

படிகாரத்தை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கொள்வது நல்லது. மேலும், இதுபோன்ற பக்கவிளைவுகளை நீங்கள், அனுபவித்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.

படிகாரம் சாப்பிடலாமா.?

படிகாரம் சாப்பிடலாம். ஆனால், குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. குறைந்த அளவில் உட்கொள்வதன் மூலம் மட்டுமே உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. மேலும், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகள் மருத்துவரின் அனுமதி இல்லாமல் படிகாரம் சாப்பிட கூடாது.

படிகாரம் பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement