பாதாமில் இவ்வளவு தீமைகளா..? என்னங்க சொல்றீங்க..!

Advertisement

Badam Side Effects in Tamil

ஒரு மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதனால் தான் நம் ஆரோக்கியம் பதிவின் வாயிலாக தினமும் பல ஆரோக்கிய தகவல்களை உங்களுக்கு பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நம் பதிவின் வாயிலாக பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன..? மற்றும் யாரெல்லாம் பாதாம் அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதை பற்றி தான் கூறப்போகின்றோம். அதனால் இபபதிவை முழுமையாக படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.

பாதாம் பிசின் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகளா..

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்: 

பொதுவாக பாதாம் பருப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடுவார்கள். இந்த பாதாம் பருப்பில் பல வகையான நன்மைகள் இருக்கின்றன. அது என்னென்ன நன்மைகள் என்று தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

என்ன தான் பாதாமில் பல நன்மைகள் இருந்தாலும் அதிலும், சில தீமைகள் இருக்கின்றன. அது என்னென்ன என்று தற்போது காணலாம்.

​ஊட்டச்சத்து உறிஞ்சுதலை குறைக்கிறது: 

பொதுவாக பாதாமில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. அதுமட்டுமில்லாமல், மற்ற தாதுக்களுடன் கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்றவையும் அதிகமாக உள்ளது. இது நம் இரத்த ஓட்டத்தில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை குறைக்கிறது. இதனால் நம் உடலுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் போகலாம். அதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

மலச்சிக்கலை உருவாக்கும்: 

பாதாமில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. அதனால் நாம் பாதாம் அதிகமாக சாப்பிடும் போது அது மலச்சிக்கலை உண்டாக்குகிறது. இப்படி நாம் பாதாமை அதிகமாக எடுத்து கொள்ளும் போது அது மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்குகிறது. மேலும் வயிற்று வலி போன்ற பாதிப்புகளையும் உண்டாக்குகிறது.

உடல் எடை அதிகரிக்கிறது: 

பொதுவாக பாதாம் பருப்பில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் சுமார் 164 கலோரிகள் உள்ளன. ஆகவே ஒருவர் பாதாம் பருப்பை அதிகமாக எடுத்துகொண்டால் அது உடல் எடையை அதிகரிக்கிறது.

மேலும் ஒருவர் தினமும் பாதாம் சாப்பிட்டுவிட்டு, உடற்பயிற்சிகள் ஏதும் செய்யவில்லை என்றால் கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..

சிறுநீரக கற்களை உண்டாக்குகிறது:

ஒருவர் அளவுக்கு அதிகமாக தினமும் பாதாம் சாப்பிட்டு வருவதால், சிறுநீரகத்தில் கற்களை உருவாக்குகிறது. காரணம் பாதாமில் குடலில் கரையக்கூடிய ஆக்சலேட்டுகள் நிறைந்துள்ளன. அவை சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கிறது.

​உடலில் நச்சுக்களை அதிகரிக்கிறது: 

நாம் அளவுக்கு அதிகமாக பாதாம் சாப்பிடும் போது அது சயனைடு விஷத்தை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது. இனிப்பு பாதாம் உடன் ஒப்பிடும் போது கசப்பான பாதாம் பருப்பில் 40 மடங்கு HCN அளவு உள்ளது.

ஆகவே பாதாமில் இருக்கும், ஹைட்ரோசியானிக் அமிலம் சுவாச பிரச்சனைகள், நரம்பு முறிவு, மூச்சுத்திணறல் மற்றும் மரணத்துக்கு கூட வழிவகுக்கும்.

ஆகவே பாதாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. எனவே ஒரு நபர் ஒரு நாளைக்கு 10 முதல் 15 பாதாம் வரை சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement