பாரம்பரிய சிறுதானிய உணவின் சுவையும், அதன் பயன்களும்..!

Advertisement

ஆரோக்கிய குறிப்புகள்..!

சிறுதானிய உணவுகள்:

உடல் நல குறிப்புகள் கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு  போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும்.

இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.

பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியம் தரும் உணவுகள் – தினை:

ஆரோக்கிய குறிப்புகள்  திணையில் அதிகளவு இனிப்பு பலகாரம் செய்யலாம். அதாவது சர்க்கரைப்பொங்கல், கருப்பட்டி, உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பாக் மற்றும் லட்டு ஆகியவற்றை செய்யலாம்.

இருப்பினும் தினையை உட்கொள்ளும்போது உடல் சூடு அதிகரிக்கும்.

எனவே சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிக்கலாம்.

தினையின் பயன்கள்:

ஆரோக்கிய குறிப்புகள்  திணையில் கூழ்  செய்து பிரசவமான தாய்க்கு கொடுப்பதன் காரணம் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.

கண்ணுக்கு ஒளியை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. எனவே தொடர்ந்து தினையை உட்கொண்டால் கண்பார்வை பிரகாசமாகும்.

ஆரோக்கிய குறிப்புகள்  தினைமாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும்.

தினை விரைவில் செரிமானமாகும் திறனை கொண்டதால் பசியை தூண்டும்.

ஆரோக்கிய குறிப்புகள்  தினமும் தினை உட்கொண்டால் உடலுக்கு அதிகளவு வலுவை சேர்க்கும்.

ஆரோக்கியம் தரும் உணவுகள் – சாமை:

உடல் நல குறிப்புகள் எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாக சாமை விளங்குகிறது.

சாதம், இட்லி, தோசை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளை இவற்றில் செய்யலாம்.

நெல்லரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து கொண்டதால் மலச்சிக்கல் மற்றும் நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.

சாமையின் பயன்கள்:

ஆரோக்கிய குறிப்புகள்  இரத்த சோகை உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது.

சாமையில் அதிகளவு மினரல்ஸ் உள்ளதினால் நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை மிகவும் எளிதாக அதிகரிக்கிறது.

மொத்தத்தில் சாமை ஆரோக்கிய உணவுகளின் அடித்தளமாகும்.

ஆரோக்கியம் தரும் உணவுகள் – குதிரைவாலி:

ஆரோக்கிய குறிப்புகள்  குதிரைவாலி சுவைமிகுந்த சிறுதானிய வகைகளில் ஒன்றாகும்.

இவற்றில் இட்லி, இடியாப்பம் கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேகவைக்கும் உணவுகள் மிகவும் மிருதுவாக இருக்கும்.

பயன்கள்:

ஆரோக்கிய குறிப்புகள்  குதிரைவாலி சாதத்தில் தயிர் சேர்த்து உட்கொள்ளும் போது வயிற்றுக்குள் நன்மை தரக்கூடிய lactobacillus என்ற பாக்டீரியாக்களை தருகிறது.

மேலும் குதிரைவாலி மோர் சோறு, அல்சரை குணப்படுத்தும்.

தினமும் குதிரைவாலி சோறு உட்கொள்ள சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

குதிரைவாலி, உளுந்து சேர்த்து களியோ அல்லது கஞ்சியோ செய்து சாப்பிட, இடுப்பு வலி மற்றும் வயிற்று கடுப்பு பிரச்சனை சரியாகும்.

காய்ச்சல் இருக்கும்போது குதிரைவாலியை கஞ்சி வைத்து குடித்தால் காய்ச்சலை குணப்படுத்தும்.

வாய்வு பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கு குதிரைவாலி மிகவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்–> நடைப்பயிற்சி நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

ஆரோக்கியம் தரும் உணவுகள் – வரகு:

ஆரோக்கிய குறிப்புகள் அடிப்படை உணவாக வரகரிசி திகழ்கிறது. மேலும் உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

வரகரிசியில் அனைத்து வகையான திண்பண்டங்களையும் செய்யலாம். அதுவும் பிரியாணி செய்வதற்கு பொருத்தமானதாகும்.

வரகு சுட்ட சாம்பல் கர்ப்பிணி பெண்களின் இரத்த போக்கை நிறுத்துகிறது.

பித்த உடம்புக்காரர்கள், சளித்தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சனை உள்ளவர்கள் வரகரிசியை மிகவும் குறைவாக சாப்பிட வேண்டும்.

தேள் கடிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது வரகு.

ஆரோக்கியம் தரும் உணவுகள் – கேழ்வரகு:

கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா என பலவகையான பலகாரங்கள் செய்யலாம்.

கேழ்வரகில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வாகிறது.

கேழ்வரகு கூழானது மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை நிறுத்தும் தன்மை கொண்டது.

பயன்கள்:

உடல் நல குறிப்புகள் உடலை உறுதிப்படுத்தவும், பித்தத்தை தணிக்கவும், வாதத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

உடல் உழைப்பு இல்லாதவர்கள் கேழ்வரகு உட்கொண்டால் ஜீரணமாகாது. அதே போல் மலச்சிக்கல் உள்ளவர்கள் கேழ்வரகை குறைந்தளவு அல்லது தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.

ஆரோக்கியம் தரும் உணவுகள் – கம்பு:

உடல் நல குறிப்புகள் மிகவும் ஆரோக்கியமான கிராமத்து உணவாக இன்று வரை கம்மங்கூழ், தோசை, குழிப்பணியாரம் போன்ற உணவு இடம் பெற்று வருகிறது.

கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய சிறுதானிய உணவுகள். கேழ்வரகு உஷ்ணத்தை அதிகரிக்கும் சிறு தனியமாகும்.

அதனாலதான் கம்பு, கேழ்வரகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கூல் தயாரிப்பது வழக்கமாகும்.

பயன்கள்:

உடல் நல குறிப்புகள் புரதம் மற்றும் கால்சியம் கம்பில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

கம்மங்கூலில் சிறிதளவு மோர் சேர்த்து குடித்தால் வயிற்று எரிச்சல், வயிற்று பொருமல் மற்றும் மூலம் ஆகிய பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கின்றது.

அதே சமயம் சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் தோல் நோய் பிரச்சனை உள்ளவர்கள் கம்பை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள் , தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement