பார்லி கஞ்சி தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

Advertisement

Barley Kanji Side Effects in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பார்லி கஞ்சி குடிப்பதால் உடலிற்கு ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். பார்லி வாற்கோதுமை என்றும் அழைக்கப்படுகிறது. இது புள் வகையை சேர்ந்த தாவரம் ஆகும். இது உணவாகவும் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. உலகில் அதிகம் பயிரிடப்படும் தாவரங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதில், பெரும்பாலும் கஞ்சி செய்து சாப்பிடுவார்கள். ஆனால், இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதனை பற்றி நாம் தெரிந்துகொள்வதில்லை. நாம் உண்ணும் உணவின் நன்மைகளை எப்படி தெரிந்துகொள்கிறமோ, அதேபோல், அதனுடைய தீமைகள் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம். ஆகையால், நீங்கள் பார்லி கஞ்சி அதிகமாக எடுத்துக்கொண்டால், உடலிற்கு என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை இப்பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பார்லி என்றால் வாற்கோதுமையா..? அப்போ உடனே இதை தெரிஞ்சிக்கோங்க..!

பார்லி கஞ்சி தீமைகள்:

பார்லி கஞ்சி தீமைகள்

  • பார்லி கஞ்சி அதிகமாக எடுத்துக்கொண்டால் சில நேரங்களில் ஆஸ்துமாவை உண்டாக்கும்.
  • பார்லி கஞ்சி எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு செலியாக் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. செலியாக் நோய் என்பது சிறுகுடலை பாதிக்கக்கூடிய நோய் ஆகும். பசையம் அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது இந்நோய் உருவாகிறது. அந்த வகையில், பார்லியில் அதிக அளவில் பசையும்  உள்ளது. இது செலியாக் நோயை ஏற்படுத்தகைகூடும்.
  • அத்திமட்டுமில்லாமல், பார்லி ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். ஹைபர்சென்சிட்டிவிட்டி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள் பார்லி கஞ்சி எடுத்துக்கொள்ளும்போது, அலர்ஜி விளைவுகள் இன்னும் அதிகமாகலாம்.
  • பார்லி கஞ்சி குடிக்கும் நபர்களுக்கு கண்கள், கண் இமைகள், மூக்கு, கைகள், கால்கள் ஆகியவற்றில் சொறி, வீக்கம், படை நோய், தோல் எரிச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
  • பார்லி, உடலின் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது. ஆகையால், இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் நபர்கள் இதனை தினமும் குடித்து வந்தால், இருப்பதை விட இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறையும். இது உடலிற்கு நல்லதல்ல.
  • குறிப்பாக, அறுவை சிகிச்சை செய்யும் நபர்கள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே, பார்லி கஞ்சி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

காலை பார்லி கஞ்சி குடிச்சி பாருங்க – உடலில் மாற்றம் உண்டாகும்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement