Disadvantages Of Drinking Milk
வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். இன்றைய நிலையில் நமக்கு உடலில் ஏதும் பிரச்சனை என்றால் நாம் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.
காரணம் அவர்கள் சாப்பிட்ட உணவுமுறை அப்படி..! ஆனால் நாம் மருந்து மாத்திரைகளை அதிகமாக உட்கொள்கின்றோம். அதாவது உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். சரி அதை விடுங்க இது நம் அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான். நாம் இன்று பசும்பால் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் முழு பதிவையும் படித்து பயன்பெறுங்கள்..!
பால் மற்றும் தயிர் இவற்றில் உள்ள நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா |
பசும்பால் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:
என்ன பசும்பாலில் தீமைகள் இருக்கா என்று நீங்களே அதிர்ச்சி அடைவீர்கள். காரணம் பசும் பாலில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. மேலும் அதில் பல ஆரோக்கியம் தரும் சத்துக்கள் இருக்கின்றன. அதனால் தான் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே பசும்பாலை குடிக்கிறார்கள்.
பொதுவாக நாம் அனைவருமே காலையில் தூங்கி எழுந்ததும் தேடுவது டீ, காபியை தான். டீ , காபி இல்லாமல் யாருக்கும் அந்த நாளே ஓடாது. அப்படி அதிகமாக பயன்படும் மற்றும் அதிக நன்மைகள் தரும் பாலில் தீமைகள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா..? ஆனால் பாலில் தீமைகள் இருக்கிறது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.
பால் ஏன் வெள்ளையாக உள்ளது தெரியுமா |
பசும்பாலில் கால்சியம் அதிகமாக இருந்தாலும், அதே பாலில் தான் அமிலத்தன்மையும் இருக்கிறது.
அப்படி பாலில் இருக்கும் அமிலத் தன்மையின் காரணமாக எலும்புகளில் இருக்கும் கால்சியம் உருகி நீருடன் வெளியேறுகிறது. இதன் காரணமாக எலும்புகள் பலவீனமாகின்றன என்று பிரிட்டிஷ் கவுன்சிலில் நடந்த ஆய்வில் கூறப்படுகிறது. அதனால் பாலில் எவ்வளவு சத்துக்கள் இருந்தாலும் அது நம் எலும்புகளுக்கு நன்மை தராது என்று சொல்லப்படுகிறது.மேலும் நாம் பால் அதிகமாக குடித்து வந்தால் ரத்தசோகை, தோல் அலர்ஜிகள், சர்க்கரை நோய், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், பால் ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | health tips in tamil |