மஞ்சகாமாலை உணவு முறை | Jaundice Treatment Food in Tamil

Advertisement

மஞ்சள் காமாலை உணவு வகைகள் | Jaundice Food to Eat in Tamil

கோடை காலம் வந்துவிட்டால் உடலில் பலவிதமான நோய்கள் வர ஆரம்பித்து விடும், அதில் முக்கியமான ஒன்று இந்த மஞ்சள் காமாலை. இது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். இரத்தத்தில் பிலிருபின் பொருள் அதிகமாக சுரக்கும் போது மஞ்சள் காமாலை வருகிறது. நமது உடல் உறுப்பு பாதிப்பிற்கு உள்ளாகிறது என்பதை காட்டும் ஒரு அறிகுறியாகும். மஞ்சள் காமாலை இருந்தால் கண், கை மற்றும் சருமங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த மஞ்சள் காமாலை வந்தால் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

தண்ணீர்:

jaundice food to eat in tamil

  •  Jaundice Treatment Food in Tamil: மஞ்சள் காமாலை இருக்கும் போது உடல் சோர்வுடன் இருக்கும், மேலும் உடலில் நீர்சத்து குறைந்து இருக்கும். எனவே இந்த நோய் இருக்கும் போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பின்பு குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. தண்ணீர் குடிப்பது கடினம் என்று நினைப்பவர்கள் இளநீர் அல்லது கரும்பு ஜூஸ் குடிப்பது நல்லது.

செறிவு அதிகமுள்ள உணவு:

jaundice food to eat in tamil

  • jaundice food to eat in tamil: மஞ்சள் காமாலை சரியாகும் வரை அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். உப்பு, காரம், புளி அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்ள கூடாது.
  • எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.

கீழாநெல்லி பொடி:

மஞ்சள்காமாலை உணவு வகைகள்

  • மஞ்சள் காமாலை உணவு: இயற்கை முறையில் இந்த தொற்றை சரி செய்வதற்கு நன்னாரி வேர், கீழாநெல்லி பொடி, வாழைத்தண்டு போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
  • 200 ml நீரில் 1 டேபிள் ஸ்பூன் கீழாநெல்லி பொடி கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலையின் தாக்கம் குறையும்.

வில்வ இலை:

jaundice treatment food in tamil

  • Manjal Kamalai Unavu Murai in Tamil: வில்வ இலைச் சாறுடன் ஒரு தேக்கரண்டி மிளகுத் தூள் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

கரிசலாங்கண்ணி:

jaundice food in tamil

  • மஞ்சகாமாலை உணவு முறை: மஞ்சள் காமாலை வருவதற்கு காரணமான பிலிருபின் அளவை குறைப்பதற்கு மஞ்சள் கரிசலாங்கண்ணியை ஜூஸ் ஆக 10 ml அளவு செய்து அதில் மிளகு 1 கிராம், தேவையான அளவு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து தொடர்ந்து 5 நாட்கள் மூன்று வேளை சாப்பிட்டு வரலாம்.
  • உடலின் தன்மைக்கு ஏற்ப மருந்து எடுத்து கொள்ள வேண்டும் என்பதால் மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்:

jaundice food in tamil

  • Jaundice Food in Tamil: கல்லீரலை பாதுகாப்பதற்கு நார்ச்சத்து மிகுந்த பாதாம், முந்திரி, ப்ரோக்கோலி, கீரைகள் போன்றவற்றை எடுத்து கொள்வது நல்லது.
  • தக்காளி, நெல்லிக்காய், லெமன், கேரட் போன்ற உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

காய்கறி மற்றும் பழங்கள்:

மஞ்சள்காமாலை உணவு வகைகள்

  • Jaundice Treatment Food in Tamil: பழங்களில் ஆப்பிள், பப்பாளி, அவகேடா, திராட்சை, மாதுளை மற்றும் மாம்பழம் போன்ற எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.
  • மஞ்சள் காமாலை இருக்கும் போது உடலில் சக்தி குறைந்திருக்கும். அதனை அதிகரிக்க காய்கறிகள், சிறு தானியங்கள் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
மஞ்சள் காமாலை குணமாக வீட்டு வைத்தியம்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement