மன அமைதி பயிற்சி | Mind Relax Yoga in Tamil

Advertisement

மன அமைதி பயிற்சி | Mind Relax Yoga in Tamil

வாழ்வில் உயர்வும் தாழ்வும், மகிழ்ச்சியும் துக்கமும் சேர்ந்தே வரக்கூடியது. தினசரி புதுப்புது சவால்களை சந்தித்து எதிர் நீச்சல் போடும் நமக்கு, மன அமைதி அத்தனை எளிதாக கிடைப்பதில்லை. ஒருவருக்கு அதிக மன அழுத்தம் அதிகரிக்கும் பொழுது அவர்களது கோவத்தை வெளிப்படுத்திவிடுவார்கள். சிலர் அவர்களது பிரச்சனைகளை மனத்திற்குள்ளேயே வைத்து கொண்டு மிகவும் மன இறுக்கத்துடன் இருப்பார்கள். இத்தகைய மன அழுத்தம் பிரச்சனையில் இருந்து விடுபட நீங்கள் தியானம் அல்லது யோகா பயிற்சிகளை பின்பற்றலாம் இதனால் உங்கள் மனம் அமைதி பெரும். சரி இந்த பதிவில் அமைதி பெற சில யோகா பயிற்சிகளை பார்ப்போம் வாங்க.

மன அமைதி பயிற்சி:

மன அழுத்தம் பிரச்சனையால் தினமும் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த வழி என்னவென்றால் யோகா, மூச்சு பயிற்சி, தியானம் இது போன்ற விஷயங்களை பின்பற்றுவது தான். அந்த வகையில் மன அழுத்தத்திற்கு நீங்கள் தியானம் செய்வது எப்படி என்று பார்ப்போம் இப்பொழுது.

தியானம் செய்யும் முறை:

தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காலை 5 அல்லது 6 மணி. மாலை 6.30 அல்லது 7.30 மணி) முடிந்தவரை குறிப்பாக அந்த நேரத்திலேயே தியானம் செய்ய முயற்சி செய்யவும்.

வீட்டில் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது அமைதியான இடமாக இருக்க வேண்டும்.

அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.

சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்த உதவும்.

இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்து செல்லவும். அங்கு பன்னிரெண்டு இதழ்கள் கொண்ட சிவப்பு தாமரையை அங்கு கற்பனை செய்யவும்.

இப்போது உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், ஆகியவற்றிற்காக பிராத்திக்கவும்.

ஐந்து, பத்து நிமிடங்கள் தியானத்தில் அமர்த்திருங்கள். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை ஒருநிலை படுத்துங்கள். இவ்வாறு செய்வதினால் மனம் அமைதி பெரும்.

யோகா வகைகள் மற்றும் பயன்கள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement