வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாங்காய் தீமைகள் பற்றி தெரியுமா.?

Updated On: March 29, 2025 4:08 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

மாங்காய் தீமைகள் | வெயில் காலத்தில் மாங்காய் சாப்பிடலாமா

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இந்த பதிவை படிக்க வந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் மாங்காயை அதிகம் விரும்பி சாப்பிடுவீர்கள் என்று நினைக்கின்றேன். நீங்கள் மட்டும் இல்லை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மாங்காய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் மாங்காயை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. சரி மாங்காயில் இருக்கும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்னது மாங்காயிலும் தீமைகள் இருக்கிறதா என்று கேட்பீர்கள். ஆனால் மாங்காயில் தீமைகளும் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

சீரகத்தை சமையலுக்கு சேர்க்கும் முன் அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்

மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

நம்மில் பலரது வீடுகளில் மாங்காய் சேர்க்காமல் சாம்பாரே வைக்க மாட்டார்கள். மாங்காயில் எத்தனையோ உணவுகள் செய்து சாப்பிட்டு வருகிறார்கள். அதுபோல மாங்காயில் பல்வேறு சத்துக்கள் இருக்கிறது.

அதாவது நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் அதிகமாகவே  காணப்படுகின்றன. அதனால் மாங்காயில் இருக்கும் சத்துக்கள் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

செய்யும் போதே நாக்கில் எச்சில் ஊரும் மாங்காய் பச்சடி.. ஒருமுறை இப்படி செஞ்சி பாருங்க

disadvantages of raw mangoes

என்ன தான் மாங்காயில் பல நன்மைகள் இருந்தாலும், அதனால் சில தீமைகளும் இருக்கிறது. அதாவது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். அதுபோல தான் மாங்காயும். அளவுக்கு மீறி சாப்பிட்டால் அது நமக்கு தீமைகளை ஏற்படுத்தும்.

 பச்சை மாங்காய் அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சில மாங்காய் வகைகளை உட்கொண்ட பிறகு சிலருக்கு தொண்டை வலி அல்லது ஒவ்வாமை போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் பச்சை மாங்காய் சாப்பிட்ட உடனே குளிர்ந்த நீரை குடிப்பது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.  

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். நீங்கள் அதிகமாக சாப்பிடுவது எரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் நெனெகல் அதிகமாக எடுத்து கொள்வது சிறந்தது.

மேலும் இதில் கலோரிகள் அதிகமாக இருக்கிறது. இதன் மூலம் உடல் எடையானது அதிகரிக்க கூடும். அதனால் நீங்கள் எடை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் மாங்காயை எடுத்து கொள்ள கூடாது.

 

👉உணவில் அளவுக்கு அதிகமாக மிளகு சேர்த்து கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா

ஒரு நாளைக்கு எத்தனை மாங்காய் சாப்பிட வேண்டும்..? 

ஒரு நாளைக்கு எத்தனை மாங்காய் சாப்பிட வேண்டும்

அதன் காரணமாக ஒரு நாளைக்கு 1 அல்லது 2 மாங்காயிற்கு மேல் சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. அதுபோல வெயில் நேரத்தில் மாங்காய் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் மாங்காயை வெயில் நேரத்தில் சாப்பிடுவதால் அது உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் வெயில் காலத்தில் மாங்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Health Tips In Tamil 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now