வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்..?

Updated On: May 26, 2026 4:12 PM
Follow Us:
maradaipu varamal iruka tips in tamil
---Advertisement---
Advertisement

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி.?

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. நம் உடலில் இதயம் எவ்வளவு முக்கியமான உறுப்பு என்று நமக்கு தெரியும். ஆனால், இக்காலத்தில் பலபேருக்கு இதயத்தில் தான் அதிக பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்படி இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று மாரடைப்பு.

மாரடைப்பு ஏற்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கு இரத்த அழுத்தம், முறையற்ற உணவு பழக்கவழக்கம், சர்க்கரை அளவு அதிகரித்தல் என பல காரணங்கள் உள்ளது. ஆண்களுக்கு மட்டுமின்றி தற்போது பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே, இப்பதிவின் வாயிலாக மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்.?

 maradaipu varamal iruka tips in tamil

மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது கெட்ட கொலஸ்ட்ரால் தான். இக்காலத்தில் உள்ள எல்லா விதமான உணவுகளிலும் கலப்படம் செய்யப்படுகிறது. இதனால் பெரும்பாலும் எல்லா உணவுகளிலும் உடலிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் உள்ளது.

இதனை தவிர்த்து நாம் பாஸ்ட் புட் என்று சொல்லிக்கொண்டு சாப்பிடும் உணவுகளில் அளவுக்கு அதிகமான கொழுப்பு சத்துக்கள் உள்ளது. நம் உடலில் தேவைக்கு அதிகமான கொழுப்பு சேரும்போது இதயகுழாயில் அடைப்பு ஏற்படுகிறது. இதனை தான் மாரடைப்பு என்கிறார்கள்.

  • மாரடைப்பு வராமல் தடுக்க, நாம் உணவில் அதிகமாக பூண்டு, இஞ்சி மற்றும் பெருங்காயம் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சிறிய துண்டு இஞ்சி, சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் 1 பல் பூண்டு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அருந்தி வந்தால் மாரடைப்பு வராது. 
  • கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை சேர்த்து கொள்ளக்கூடாது.
  • உப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக சேர்த்துக்கொள்ள கூடாது.
  • முக்கியமாக, எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளக் கூடாது.
  • தினமும், 10 அல்லது 15 நிமிடம் ஆவது, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • ஒரு  நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
  • தினமும் 8 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.
  • எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பொருட்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • முக்கியாக, ஃபாஸ்ட் ஃபுட்களை தவிர்க்க வேண்டும்.

மாரடைப்பு வராமல் தடுக்கும் உணவுகள்:

சைவ நபர்களாக இருந்தால் முட்டைகோஸ், கீரைகள், பச்சை காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவ நபர்களாக இருந்தால் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, டியூனா போன்ற ஒமேகா 3 அமிலம் நிறைந்த மீன்களை சாப்பிட வேண்டும். அதுமட்டுமில்லாமல், சைவ மற்றும் அசைவ நபர்கள் அனைவரும் வால்நட், அக்ரூட் பருப்புகள், பீன்ஸ், பூண்டு ஆகியவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் மாரடைப்பு வராதாம்..! வேணாமுன்னு ஒதிக்கிடாதீர்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now