மிளகு தீமைகள்
இன்றைய ஆரோக்கியம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் வாழும் இந்த அவசர உலகம் ரொம்பவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். இந்த நிலையில் பலரும் மருந்து மாத்திரைகளை உண்டு தான் வாழ்கின்றனர். அதுபோல நம் உண்ணும் உணவுகளில் சேர்க்கப்படும் உணவு பொருட்கள் அதாவது வெந்தயம், சீரகம், மிளகு, சோம்பு போன்ற பொருட்கள் அனைத்துமே பல நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் போது அது நமக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் மிளகு அதிகமாக உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் தீமைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
கடுகை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த கூடாது ஏன்னு தெரியுமா..? |
மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
இந்தியாவின் பாரம்பரிய உணவுக்கு சுவை சேர்க்க கருப்பு மிளகு பயன்படுத்தப்படுகிறது. கருப்பு மிளகு வயிற்றுப் போக்கு போன்ற பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இதற்கு திரிகாடு என்ற ஆயுர்வேத பெயரும் உண்டு. மிளகு பல நோய்களை போக்கும் மருந்தாக இருந்தாலும் இதை உணவு அளவுகளில் உட்கொள்ளும்போது மட்டுமே பாதுகாப்பானது. மிளகை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது அது உங்கள் உடலில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.
இரைப்பை பிரச்சினைகள்:
மிளகை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, வயிறு அசௌகரியத்துக்கு வழிவகுக்கிறது. மிளகு அதிகளவு உணவில் சேர்த்து கொள்ளும் போது அது இரைப்பையில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் வயிற்றில் புண், வயிற்று போக்கு, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன..? |
நுரையீரல் பிரச்சினைகள்:
கருப்பு மிளகை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது நுரையீரலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இந்த பிரச்சினை குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மிளகை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, சுவாச மண்டலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கிறது. மிளகுகள் மூச்சு விடுதல் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. மேலும் மிளகு அதிகளவு பயன்படுத்தும் போது தொண்டையில் தொந்தரவு, ஆஸ்துமா மற்றும் பிற வகை சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.
கர்ப்பிணி பெண்கள்:
மிளகை கற்பகாலத்தில் குறைவான அளவில் எடுத்துக் கொள்ளும் போது கர்ப்பத்திற்கு எந்த தீங்கும் கிடையாது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது கருப்பு மிளகு கருச்சிதைவை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே மிதமான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
அதுபோல பால்கொடுக்கும் தாய்மார்கள் மிளகை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.
இரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..! |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |