மீன் உணவுகளுடன் ஏன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

மீனுடன் தயிர் சாப்பிடலாமா?

வணக்கம் நண்பர்களே பொதுவாக நமது முன்னோர்கள் உணவு முறையில் பல கட்டுப்பாட்டினை வைத்து அதனை பினற்றியுள்ளனர். அதாவது எந்த உணவுடன், எந்த உணவை இணைத்து சாப்பிடலாம். எந்தெந்த உணவுகளை சேர்த்து சமைக்கலாம், எதை சாப்பிட்டால் எதை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று பலவிதமான கட்டுப்பாட்டினை வைத்துள்ளனர். அவற்றில் ஒன்று தான் மீன் நாம் மீன் சாப்பிட்டால் தயிர் சேர்த்துக்கொள்ள கூடாது என்று பலர் சொல்லி கேட்டிருந்திருப்போம், அதற்கு உண்ம்மையான காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

மீனுடன் தயிர் ஏன் சாப்பிடக்கூடாது? – What Happens if you Eat Fish and Curd

பால் சார்ந்த பொருள்களில் ஒன்று தான் தயிர், இந்த தயிரை பலவகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக தயிரில் வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி12, பொட்டாசியம், கால்ஷியம் உள்ள்ட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சத்துக்குள் குறிப்பிட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது. அத்தகைய சத்துக்களை நாம் முழுமையாக பெறமுடியும்.

ஆனால் மீன் சாப்பிட்டுவிட்டு தயிர் சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு முக்கிய காரணம் என்னெவென்றால் தயிருக்கு பொதுவாகவே செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை உண்டு ஆக சத்துள்ள மீன் உணவை சாப்பிடும்போது  செரிமானம் மேலும் மந்தமடையும். இதனால் உடலுக்கு எந்தவிதமான சத்தும் மீன் உணவு மூலம் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். இதுதான் தயிரையும் மீனையும் சேர்த்து சாப்பிடாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

மருத்துவரீதியாக பார்க்கும்பொழுது மீன் மற்றும் பால் பொருட்கள் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்தவை. உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருக்கும் பொழுது இரண்டையும் சாப்பிட்டால் வலி, வயிறு சரியின்மை, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.

தயிருடன் சாப்பிடக்கூடாத மற்ற உணவுகள்:

தயிருடன் கீரை, மாம்பழம் போன்றவற்றையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று சொல்லப்டுகிறது. மாம்பழத்துடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது நம்முடைய உணவுப் பழக்கத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மாம்பழமும் தயிரும் எதிர்தன்மை கொண்டதாகும். மாம்பழம் உடலுக்கு சூடு. இதுவும் தயிருடன் சேர்த்து சாப்பிடுவது தவறான செயல். ஏதோவொரு நாளில் சாப்பிட்டால் பெரியளவில் பாதிப்பு இருக்காது. ஆனால் தொடர்ந்து இப்படி சாப்பிட்டுவந்தால், செரிமானப் பிரச்னை ஏற்படக்கூடும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement