முடக்கத்தான் கீரை பயன்கள் | Mudakkaththan Keerai Benefits in Tamil

Mudakkaththan Keerai Benefits in Tamil

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் | Mudakathan Keerai Uses in Tamil

கீரை வகைகள் அனைத்திலுமே ஒவ்வொரு சத்து உள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு சத்துக்களும் உடலுக்கு தேவையான ஆற்றலையும், உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை தடுப்பதற்கும் மேலும் உடலில் வேறு ஏதேனும் நோய்கள் பரவாமல் இருப்பதற்கும் உதவுகிறது. கீரையில் பல வகைகள் உள்ளன. நாம் இந்த பதிவில் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உள்ளது, மேலும் அதில் என்ன வகையான சத்துக்கள் உள்ளன அவை எந்த நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்காலம் வாங்க.

சத்துக்கள்:

 1. புரதச்சத்து
 2. நார்ச்சத்து
 3. கார்போஹைட்ரேட்
 4. தாது உப்புகள்

மூட்டு வலியை சரி செய்ய – முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்:

முடக்கத்தான் கீரை பயன்கள்

 • ஒரே இடத்தில் ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை செய்வதாலும், உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பதாலும் இளம் வயதிலேயே கால் வலி, மூட்டு வலி போன்றவைகள் ஏற்படும். அப்படி இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு முறை முடக்கத்தான் கீரையை உணவில் சேர்ப்பதால் எலும்பு வளர்ச்சி அடைவதற்கும், மூட்டு வலியை குணப்படுத்தவும் உதவுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலியை குணப்படுத்தவும் உதவுகிறது.
 • மூட்டுகளில் இருக்கும் யூரிக் ஆசிடை கரைத்து சிறுநீராக வெளியேற்றுகிறது. மேலும் அதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் வெளியேற்ற உதவுகிறது. நம் உடம்பில் இருந்து இவை வெளியேறுவதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.
 • முதுகு வலி, உடல் வலி, கால் வலி உள்ளவர்கள் இந்த கீரையை விளக்கெண்ணயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.

கண் பிரச்சனைகளை சரி செய்ய – Mudakkaththan Keerai Benefits in Tamil:

முடக்கத்தான் கீரை பயன்கள்

 

 • கண் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை நெய்யில் வதக்கி அதனுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும் மேலும் கண் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது.

மலச்சிக்கலை குணப்படுத்த – முடக்கத்தான் கீரை பயன்கள்:

Mudakkaththan Keerai Benefits in Tamil

 • இந்த கீரையில் இருக்கும் வைட்டமின் மற்றும் தாது உப்புகள் மலச்சிக்கல், கரப்பான், வாயு பிரச்சனைகள் மற்றும் வாத நோய் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
 • முடக்கத்தான் கீரையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.

மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்த – Mudakathan Keerai Uses in Tamil:

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்

 • முடக்கத்தான் கீரையை சாறாக செய்து குடிப்பதன் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

புற்றுநோயை குணப்படுத்த – முடக்கத்தான் கீரை பயன்கள்:

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்

 • புற்றுநோய் செல்கள் உடலில் வளராமல் தடுப்பதற்கும் மற்றும் புற்றுநோயை குணப்படுத்துவதற்கும் உதவுகிறது.

முடக்கத்தான் கீரை:

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்

 • இந்த கீரையை தோசை மாவில் சேர்த்து தோசையாக செய்து சாப்பிடலாம்.
 • துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்த முடக்கத்தான் கீரையை சேர்த்து கூட்டாக செய்து சாப்பிடலாம். முடக்கத்தான் கீரையை சூப் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
 • முடக்கத்தான் கீரையை நீரில் கொதிக்க வைத்து உண்ணக்கூடாது. இதில் உள்ள சத்துக்கள் ஆவியாக வெளியேறிவிடும் என்பதால் இதனை கொதிக்க வைத்து உண்ண வேண்டாம்.
பசலைக்கீரை நன்மைகள்
அகத்திக்கீரை நன்மைகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியம்