தலை முடி வளர அக்குபஞ்சர் செய்யும் முறை
அக்குபஞ்சர் என்றால் என்ன தெரியுமா.? அக்கு என்றால் புள்ளி – பஞ்சர் என்றால் துளையிடுதல் ஆகும். மிக மெல்லிய ஊசி அல்லது கை விரல் கொண்டு மேல் பகுதிகளை தொடுவதன் மூலம் , நோய் முறைகளை அறியும் வைத்தியம் ஆகும். இயற்கை முறைகளை மீறுவதே நோய்க்கான முதல் காரணமாகும். அக்குபஞ்சர் ட்ரீட்மெண்ட் எடுக்கும் பொழுது அதன் சரியான முறைகளை கடைபிடிக்க வேண்டும். சிலருக்கு என்ன செய்தாலும் தலை முடிகள் அதிகமாக உதிர்கின்றது. அத்தகைய சமயத்தில் எவ்வளவு தான் ட்ரீட்மெண்ட் செய்து வந்தாலும். இந்த அக்குபஞ்சர் முறையானது உதவியாக இருக்கிறது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் அக்குபஞ்சர் செய்ய கூடாது.
முடி உதிர்வது இயற்கை என்றாலும் அளவுக்கு அதிகமாக உதிர்வது நமது அஜாக்கிரதை தான். கூந்தலை சரியாக கவனிக்காமல் இருக்கும் பொழுதுதான் மெல்ல மெல்ல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் தான் ஆண்களுக்கும் சொட்டை விழுவது காரணமாகிறது. முடி உதிர்வதை தவிர்த்தாலே கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். மாத்திரையால் கூட பாதிப்பு ஏற்பட கூடும். ஆனால் அக்குபஞ்சரில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் சொல்லப்படுகிறது. ஊசிகளை பயன்படுத்தாமல் அக்குபஞ்சர் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க …
தலை முடி அடர்த்தியாக வளர எளிய வழிகள் |
பாளையம் என்ற அக்குபஞ்சர் முறை:
பாளையம் என்ற அக்குபஞ்சர் ஆனது கை விரல்களால் செய்வது ஆகும். முதலில் சமனம் போட்டு அமர்ந்து இரு உள்ளங்கைகளையும் ஒன்றையொன்று பார்க்கும் படி வைக்க வேண்டும். அதன் பிறகு இரு கட்டை விரல்களையும் விட்டுவிட்டு , மற்ற விரல்களை மடக்கி, நகங்கள் ஒன்றையொன்று உரசுவது தான் பாலயம் அக்குபஞ்சர் ஆகும்.
தலை முடி மசாஜ் :
தலை முடியை மசாஜ் செய்வதற்கு காரணம் என்ன. ? தலையில் மசாஜ் செய்வதால் தலை மண்டலத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் வேர்கள் தூண்டப்படுக்கின்றன. நம் தாத்தா காலத்தில் வாரத்தில் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் நாம் அப்படி இல்லை தினமும் தேங்காய் எண்ணெய் கூட வைப்பது இல்லை. தலை முடியை எப்படி மசாஜ் செய்யலாம் என்று பார்க்கலாம்.
- முதலில் தலையில் நல்லெண்ணெய் அப்படி இல்லை என்றால் தேங்காய் எண்ணெய் ஒரு கைக்குழி அளவு தடவ வேண்டும்.
- பிறகு கை விரலில் நுனி விரல்களை தலையில் வைத்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு சுழற்சி முறையில் உங்கள் கைகளை வைத்து மெல்ல மெல்ல தேய்த்து கொடுக்க வேண்டும்.
- ஐந்தில் இருந்து ஆறு நிமிடங்கள் இவ்வாறு மசாஜ் செய்து வரலாம். பிறகு இடைவேளை எடுத்து கொண்டு மீண்டும் இதே போல் மசாஜ் செய்யவும்
- உச்சந்தலையில் எண்ணெய் தேய்ப்பதால் மன அழுத்தம் , உடல் சோர்வு போன்றவை இதன் மூலம் குறைகிறது.
கூந்தலுக்கு மாஸ்க் :
- தலை முடிக்கு ஊட்டம் அளிக்க முட்டை, தேன், செம்பருத்தி, தயிர் என மாஸ்க் போடுவதற்கு ஏற்ற பொருட்கள் ஆகும்.
- வாரம் ஒரு முறை கூந்தலுக்கு மாஸ்க் போடுவதால் முடி உதிர்வதை கட்டுப்படுத்துகிறது.
- க்ரீன் டீ தயார் செய்து அதனை கூந்தலில் சேர்ப்பதால் முடி உதிர்வதை தடுக்கிறது.
- ரசாயன ஷாம்புகள் மற்றும் டைகளின் பக்கம் போகாதீர்கள். ஹெர்பலுக்கு மாறினால் உங்கள் கூந்தலை நரை முடி இல்லாமல் காப்பாற்றலாம்.
- பின்பு சுடுதண்ணீரில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது. சுடுதண்ணீரில் குளிப்பதால் முடி வறட்சியை அடைகிறது.
முடி உதிர்வதை தவிர்க்க சாப்பிட கூடிய உணவுகள் :
- நல்ல உணவுகளும் கூந்தலுக்கு ஊட்டம் தரும். புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
- புரதச் சத்து நிறைந்து உள்ள பாதம், பழங்கள், தொடர்ந்து சாப்பிடுவதால் முடி அதிகம் வளர உதவுகிறது.
- முருங்கை கீரை வாரத்தில் ஒரு முறை சேர்ப்பதன் மூலம் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
- இரவு உறங்குவதற்கு முன்பு பேரிச்சம்பழம் சாப்பிடுவது நல்லது
- வாரத்தில் ஒரு முறை சோற்றுக்கற்றாழை ஜூஸ் குடிப்பது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |