மூக்கிரட்டை கீரையின் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

மூக்கிரட்டை கீரை தீமைகள் | Mookirattai Keerai Side Effects

ஹலோ நண்பர்களே..! இன்று நம் ஆரோக்கியம் பதிவில் அனைவரும் பயனுள்ள தகவலை பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம். நம் நாட்டில் பல வகையான கீரை வகைகள் உள்ளன. எல்லா கீரைகளும் அதிகப்படியான சத்துக்களை கொண்டுள்ளன. கீரைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். காரணம் கீரைகளில் அவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன. அந்த வகையில் நாம் இன்று மூக்கிரட்டை கீரையை பற்றி தான் பார்க்கப்போகிறோம். மூக்கிரட்டை கீரை பல நன்மைகளை கொண்டிருந்தாலும் அதில் தீமைகளும் நிறைந்துள்ளது. மூக்கிரட்டை கீரையின் தீமைகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.

மூக்கிரட்டை கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்: 

மூக்கிரட்டை கீரை

மூக்கிரட்டை கீரை பல மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும் அதை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. எந்த உணவு பொருளாக இருந்தாலும் அளவோடு சாப்பிட்டு வந்தால் எந்தவொரு பாதிப்பும் கிடையாது. அளவுக்கு மீறி சாப்பிடுவதால் தான் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. அந்த வகையில் இந்த மூக்கிரட்டை கீரையால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.

இதையும் பாருங்கள்மூக்கிரட்டை கீரையின் பயன்கள்

  • மூக்கிரட்டை கீரை உடலிலுள்ள நீரை வெளியேற்றும் தன்மையை கொண்டுள்ளது. இந்த கீரையை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வதால் உடலிலுள்ள நீர் இழப்பிற்கு இது காரணமாகிறது. இதனால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
  • உங்களுக்கு தினமும் மருந்து மாத்திரை சாப்பிடும் பழக்கம் இருந்தால் இந்த மூக்கிரட்டை கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம், இந்த கீரை நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி உடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே, தினசரி மருந்து சாப்பிடுபவர்கள் மருத்துவரின் ஆலோசனை படி இந்த கீரையை சாப்பிட வேண்டும்.
  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த கீரை சாப்பிடுவது பயனுள்ளது என்று எந்தவொரு மருத்துவ ஆய்விலும் கூறப்படவில்லை. அதனால், இந்த மூக்கிரட்டை கீரை சாப்பிடும் முன் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.
  • இந்த கீரையை அதிகளவு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த இரத்த அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக இதய துடிப்பில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறது.
  • எத்தனால் அழற்சி உள்ளவர்கள் இந்த கீரை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
  • அதேபோல் கீரைகளை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  •  கீரைகளை சூடு படுத்தி சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
40 கீரை வகைகள் அதன் பயன்களும்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement