மூலம் ஆரம்ப நிலையா அதை குணப்படும் முறை..!

natural remedies for piles

மூலம் ஆரம்ப நிலை

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. 40 வயது கடந்த ஆண், பெண் இருவருக்கும் அதிக வெப்பம் அதிகரித்தால் ஏற்படும் நோய்களில் தான் மூலம். இந்த மூலம் நோயின் ஆரம்ப நிலை என்ன?, மூலம் ஆரம்ப நிலையில் நாம் என்னென்ன செயல்முறைகளை பின்பற்றினால் மூலம் நோய் குணமாகும் போன்ற சில தகவல்களை பற்றி இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

மூலம் அறிகுறிகள்:

  • மலம் கழிக்கும் போது சிரமம் உண்டாகும்.
  • ஆசனவாயில் சிறிய வீக்கம் தோன்றும், வலி இருக்காது.
  • அடுத்த நிலையில் மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம் கசியும்.
  • அல்லது மலத்தோடு வரிவரியாக ரத்தம் வெளிப்படும். சில வாரங்களில், அந்த நபருக்கு மலம் கழித்த பின்னர் சொட்டுச் சொட்டாக ரத்தம் வெளிவரும்.
  • சிலருக்கு வீக்கம் பெரிதாகி நிலைத்துவிடும். அப்போது அடிக்கடி ஆசனவாயில் வலியை ஏற்படுத்தும்.
மேலும் அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ள–> மூலம் நோய் அறிகுறிகள்

மூலம் நோய் ஆரம்ப நிலை:

  1. மூலம் ஆரம்ப நிலையில், சிறிய அளவில் தடிப்பு அல்லது வீக்கம் தோன்றும். அந்த இடத்தில் லேசாக வலி இருக்கும்.
  2. இரண்டாம் நிலையில், வீக்கம் பெரிதாக இருக்கும். மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறும். மலம் கழித்தபின் வீக்கம் உள்ளே சென்றுவிடும்.
  3. மூன்றாம் நிலையில், வீக்கம் நிரந்தரமாக இருக்கும். ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்.
  4. நான்காம் நிலையில், வீக்கத்தில் புண் ஏற்படலாம். வலி அதிகமாகலாம். அடிக்கடி ரத்தம் மிக அதிகமாக வெளியேறும்.

இந்த மூலம் நோயின் ஆறாம் நிலையில் சில விஷயங்களை நீங்கள் கடைபிடித்தால் போதும் பிரச்சனை மிக எளிதாக குணாகிவிடும். சரி அஅவற்றில் பற்றில் இப்பொழுது நாம் படிக்க ஆரமிக்கலாம் வாங்க.

​வெதுவெதுப்பான பாத்டப் குளியல்:

பொதுவாக மூலம் நோய் உள்ளவர்களுக்கு பாத்டப் குளியல் மிக சிறந்த ஒன்றாகும். குளியல் தொட்டியில் அல்லது பெரிய பாத்திரத்தில் மிதமான சூடு கொண்ட நீரை நிரப்புங்கள். பின் 10 நிமிடங்கள் அந்த நீரில் குளிக்க வேண்டும். இது போன்று தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குளித்து வருவதினால். மூலம் நோயால் ஏற்படும் அரிப்பு தன்மை குறைக்கும்.

டீ ட்ரீ ஆயில்:

டீ ட்ரீ ஆயில்

மூலம் பிரச்சனைக்கு சிறந்த வீட்டு வைத்தியம் முறை என்று டீ ட்ரீ எண்ணெயை சொல்லலாம். டீ ட்ரீ ஆயில் என்று சொல்லப்படும் தேயிலை எண்ணெயை 3 துளிகள் எடுத்து, 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து பருத்தியை நனைத்து மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் அந்த பஞ்சை கொண்டு துடைக்க வேண்டும். இவ்வாறு தினமும் மூன்று முறை செய்து வர டீ ட்ரீ எண்ணெயில் உள்ள பண்புகள் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தமாகவும் கிருமிகள் அற்றதாகவும் வைத்திருக்க செய்யும்.

நார்ச்சத்து உணவுகள்:

மூலம் நோயை குணம்படுத்த நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. ஆகவே தினமும் உங்களது உறவு முறையில் 30 முதல் 35 கிராம் நார்ச்சத்து எடுத்துகொள்வதன் மூலம் மூல நோயை குணப்படுத்தலாம். காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்றவை மூலத்தை தீவிரமாகாமல் தடுக்க செய்யும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்