மூலிகை மருத்துவ குறிப்புகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதவில் மூலிகை சாறும் அதன் பயன்கள் பற்றியும் நோய் தீர்க்கும் மருந்து பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. ஒவ்வொரு மூலிகையும் ஒரு நோயிற்கு மருந்தாக பயன்படுகிறது. ஆனால், அதனை பற்றி நம்மில் பலபேருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதவில் மூலிகை சாறும் அதன் பயன்களும் பற்றி கொடுத்துள்ளோம்.
மூலிகை மருத்துவ குறிப்புகள் -Nattu Marunthu Vagaigal
அருகம்புல் சாறு பயன்கள் சாறும்
அருகம்புல் சாறு தினமும் பருகிவர இரத்தத்தை சுத்தபடுத்தும், வாய் புண் ஆற்றும் மேலும் தாய்ப்பால் சுரக்க அதிகளவு உதவுகிறது.
இளநீர் மருத்துவ பயன்கள்:
இளநீர் தினமும் அருந்தி வர என்றும் இளமையுடனும், ஆனந்தமாகவும் இருக்க உதவும். அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
வாழைத்தண்டு சாறு பயன்கள்:-
வாழைத்தண்டு சாறு தினமும் குடித்துவர சிறுநீரக கல்லை அகற்ற உதவுகிறது, மூட்டு வலியை நீக்கும், உடல் எடையை குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.
வெள்ளை பூசணி மருத்துவ பயன்கள்:-
வெள்ளை பூசணிச்சாறு தினமும் அருந்திவர குடல் புண் குணமாகும்.
வல்லாரை சாறு பயன்கள்:-
வல்லாரை சாறு தினமும் அருந்திவர நரம்பு சமந்தபட்ட நோய்களை நீக்கும் ஞாபகசக்தியை அதிகரிக்க உதவுகிறது.
சித்த மருத்துவம் (Siddha Maruthuvam In Tamil)
சித்த மருத்துவம் :1
வில்வம் சாறு அருந்தி வர அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு சமந்தபட்டநோய்களுக்கும் உகந்தது.
சர்க்கரையின் அளவை குறைக்கவல்லது சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
சித்த மருத்துவம் :2
கொத்தமல்லி சாறு தினமும் அருந்திவர அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தும்.
சித்த மருத்துவம் :3
புதினா சாறு தினமும் அருந்தி வர இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க உதவும். மற்றும் அணைத்து ரத்த சமந்தமான, வாயு சமந்தமான நோய்களையும் குணப்படுத்தும்.
சித்த மருத்துவம் :4
நெல்லிக்காய் சாறு தினமும் அருந்திவர உடல் அழகை அதிகரிக்க மிகவும் வல்லமை வாய்ந்தது.
சித்த மருத்துவம் :5
துளசி சாறு தினமும் அருந்தி வர சளி மற்றும் சோம்பேரிதனத்தை குறைக்க வல்லது. அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.
குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம் |
பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam In Tamil)
பாட்டி வைத்தியம் :1
அகத்தி சாறு தினமும் அருந்தி வர மலசிக்கலை குணபடுத்தும், மேலும் சர்க்கரை நோயை குணபடுத்தும்.
பாட்டி வைத்தியம் :2
கடுக்காய் சாறு தினமும் அருந்திவர முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் உகந்தது.
பாட்டி வைத்தியம் :3
முடக்கத்தான் சாறு தினமும் அருந்திவர மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு நல்லது.
பாட்டி வைத்தியம் :4
கல்யாண முருங்கை சாறு தினமும் அருந்திவர உடல் எடையை குறைக்க உதவுகிறது, மேலும் இவற்றில் வாயில் மென்று நம் உமிழ் நீருடன் கலந்து சாப்பிட்டால் உடனடியாக மலச்சிக்கல் மற்றும் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் இந்த சாறு கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றதல்ல.
பாட்டி வைத்தியம் :5
தூதுவளை சாறு தினமும் அருந்திவர சளி தொல்லையை குணப்படுத்தும்.
படிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..! |
வீட்டு மருத்துவ குறிப்புகள் (Veetu Vaithiyam In Tamil)
வீட்டு மருத்துவ குறிப்புகள் :1
ஆடாதோடா சாறு தினமும் அருந்திவர ஆஸ்மாவை குணப்படுத்த உதவுகிறது.
வீட்டு மருத்துவ குறிப்புகள் :2
கரிசலாங்கண்ணி சாறு தினமும் அருந்திவர கண் பார்வைக்கு நல்லது, முடி வளர்ச்சிக்கு நல்லது
வீட்டு மருத்துவ குறிப்புகள் :3
திருநீற்றுப் பச்சிலை சாறு இந்த இலை சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும். மேலும் இவற்றின் சாறை முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மீது தடவினால், கரும்புள்ளிகள் மறையும்.
வீட்டு மருத்துவ குறிப்புகள் :4
மலைவேம்பு சாறு இது பெண்கள் மாதவிடாய்(Menstrual time) நேரத்தில் வயிற்று வலி இருந்தால் இந்த மலை வேம்பு சாப்பிட்டால் வயிற்று வலி குணமடையும்.
வீட்டு மருத்துவ குறிப்புகள் :5
கற்ப்பூரவல்லி சாறு இவற்றின் சாறை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும்.
வீட்டு மருத்துவ குறிப்புகள் :6
குழந்தைகளின் மலச்சிக்கல் தீர சோம்பு நீர் ஒரு நல்ல மருந்து
சோம்பு மலசிக்கல் சரி செய்ய ஒரு சிறந்த ஒன்றாக விளங்குகிறது கருகாமல் வறுத்து பின் ஒரு டம்ளர் தண்ணீரில் அதை போட்டு கொதிக்க விட்டு அது கால் டம்ளர் ஆனதும் அதை குழந்தைக்குக் குடிக்க கொடுக்க வேண்டும். மலச்சிக்கல் நன்கு குணமாகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |