யானை நெருஞ்சில் தீமைகள் | Yanai Nerunjil Side Effects in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். யானை நெருஞ்சில் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். நெருஞ்சிலில் சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் மற்றும் பெரு நெருஞ்சில் என மூன்று வகைகள் உள்ளது. இதனுடைய காய் ஆனது முற்றி காய்ந்து முள் போன்று இருக்கும். இவற்றில் பெரு நெருஞ்சில் தான் யானை நெருஞ்சில் என்று அழைக்கபடுகிறது. நெருஞ்சியின் காய், இலை, வேர், பூ மற்றும் தண்டு என அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.
நெருஞ்சிலில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் உள்ளது. சிறுநீரக பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுகிறது. சிறுநீர்த் தொற்று பிரச்சனைகளுக்கு நெருஞ்சில் நல்ல பலன் அளிக்கும். இப்படி யானை நெருஞ்சில் பல நன்மைகள் இருந்தாலும் ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
நெருஞ்சில் செடியின் நன்மைகள்..!
Yanai Nerunjil Side Effects in Tamil:
- யானை நெருஞ்சில் நம் உடலிற்கு பல்வேறு நன்மைகளை அளித்தாலும், அதனை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது வாந்தி,வயிற்றுப்போக்கு போன்ற பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
- யானை நெருஞ்சில் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
- யானை நெருஞ்சில் பொடியை அதிகமாக ஓமம், சீரகம் போன்ற பொருட்களுடன் எடுத்துக்கொள்ளும்போது சில நபர்களுக்கு ஆஃப்டல்மியா (Ophthalmia) என்ற கண் நோயை ஏற்படுத்தக்கூடும்.
- கர்ப்பிணி பெண்கள் யானை நெருஞ்சில் முள் பொடியை அதிக அளவில் எடுத்து கொண்டால் வாந்தி உட்பட பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, யானை நெருஞ்சில் பொடியை கர்ப்பிணி பெண்கள் அளவோடு எடுத்து கொள்ள வேண்டும்.
- எனவே, யானை நெருஞ்சில் பொடியை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் மேற்கூரிய பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.
- யானை நெருஞ்சில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல விதமான நன்மைகளை அளிக்கும் மருந்தாக இருந்தாலும், அதிக அளவில் எடுத்து கொள்வதால் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் அனைவருமே கருத்தில் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |