வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெயில் காலத்தில் லெமன் ஜூஸ் குடிப்பது கெட்டதா..? என்னங்க சொல்றீங்க..!

Updated On: April 18, 2024 11:11 AM
Follow Us:
lemon juice side effects in tamil
---Advertisement---
Advertisement

எலுமிச்சை சாறு தீமைகள்

வணக்கம் பிரண்ட்ஸ்..! உங்களிடம் ஒரு கேள்வி..? உங்களுக்கு லெமன் ஜூஸ் பிடிக்குமா..? இது என்ன கேள்வி யாருக்கு தான் லெமன் ஜூஸ் பிடிக்காது சொல்லுங்கள் என்று கேட்பீர்கள். உண்மை தான் இந்த வெயில் காலத்தில் மக்கள் அதிகமாக அருந்துவது லெமன் ஜூஸ் தான். காரணம் லெமன் ஜூஸ் வெயிலுக்கு இதமான பானமாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல், இதை கடையில் தான் வாங்கி குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை சுலபமாக வீட்டிலேயே தயார் செய்து குடிக்கலாம். அதனாலேயே பலரும் அதிகமாக லெமன் ஜூஸ் குடித்து வருகிறார்கள். சரி வாங்க நண்பர்களே லெமன் ஜூஸில் இருக்கும் தீமைகளை தெரிந்து கொள்ளலாம்.

எலுமிச்சை ஜூஸ் 3 விதமாக சுவையா இப்படி செய்யுங்க

லெமன் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்: 

எலுமிச்சை சாறு

என்னது எலுமிச்சை சாறில் தீமைகள் இருக்கிறதா என்று ஆச்சர்யமாக கேட்பீர்கள். ஆனால் எலுமிச்சை சாறிலும் தீமைகள் இருக்கிறது. பொதுவாக நாம் எந்த உணவு பொருளாக இருந்தாலும் அதை அளவோடு தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சாக தான் மாறுகிறது. அதேபோல தான் மற்ற உணவு பொருட்களும், நாம் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். சரி எலுமிச்சை சாறு குடிப்பதால் ஏற்படும் தீமைகளை இங்கு காணலாம்.

பல் சிதைவை ஏற்படுத்தும்: 

பொதுவாக எலுமிச்சை பழத்தில் அதிக அமிலத்தன்மை இருக்கிறது. அதனால் நாம் எலுமிச்சை சாறை அதிகமாக உட்கொண்டால், அதில் இருக்கும் அமிலத்தன்மை பல் சிதைவை ஏற்படுத்துகிறது. அதுபோல எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடிக்கும் போது அது பற்களின் உணர்வை இழக்க செய்கிறது. இது நாளடைவில் பற்கள் விழுவதற்கும் காரணமாகிறது.

👉தினமும் இட்லி சாப்பிடுபவரா நீங்கள்.. அப்போ அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்

தலைவலியை ஏற்படுத்தும்: 

எலுமிச்சை சாறு

ஒரு நபர் தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் அது ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும். இதற்கு காரணம், எலுமிச்சை பழத்தில் உள்ள டைரமைன் என்ற இயற்கையான மோனோஅமைனை உற்பத்தி செய்கிறது. இதனால் அடிக்கடி தலைவலியை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

வயிற்று பிரச்சனைகள்:

நாம் அதிகமாக லெமன் ஜூஸ் குடித்து வருவதால் அதில் இருக்கும் அமிலத்தன்மை வயிற்று உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதாவது இரைப்பை குடல் பிரச்சனைகள், நெஞ்செரிச்சல், வயிற்றில் புண், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளை லெமன் ஜூஸ் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

புற்றுநோய் புண்களை ஏற்படுத்தும்: 

பொதுவாக புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் லெமன் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், எலுமிச்சையில் இருக்கும் அமிலத்தன்மை புற்றுநோய் புண்களை ஆறவிடாமல் செய்கிறது.

சீரகத்தை சமையலுக்கு சேர்க்கும் முன் அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Health Tips In Tamil 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now