வயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம்..!

வயிற்று புண்

Vayiru pun patti vaithiyam in tamil..!

குடல்புண் மற்றும் வயிற்றுப்புண் தோன்றுவதற்கான காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை. இருந்தாலும் புகைபிடித்தல், புகையிலை சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் சாப்பிடுவதினால் குடல் புண் தோன்றுகிறது.

மேலும் சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பரின் முதலிய வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும், மூட்டு வலிக்காகவும் சாப்பிடும் மருந்துகள் மற்றும் வீக்கத்தை குறைக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிடுவதனால் வயிற்று புண் மற்றும் குடல்புண் ஏற்படுகிறது.

இதை தவிர்த்து மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், தாமதமாக உணவு அருந்துதல், ஐஸ்கிரீம், சாக்லேட், புளிப்பு தன்மை அதிகம் உள்ள உணவுகள், அதிகம் சாப்பிடுவதினால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

காரணமின்றி பற்களை கடித்தல், வயிற்றை துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, வயிற்று பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாய தோற்றமும் இருந்தால் கண்டிப்பாக குடல்புண் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் அடுத்த நிலையாக இந்த பிரச்சனை அல்சர் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

மூலிகை சாரும் அதன் பயன்களும் !!! நோய் தீர்க்கும் மருந்து

இந்த பிரச்சனையை சரி செய்ய மூலிகை வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்று பார்ப்போம்.

Vayiru pun patti vaithiyam in tamil / வயிற்று புண் குணமடைய உணவு

வயிற்று புண் குணமடைய பழம்:-

Vayiru pun patti vaithiyam in tamil – இந்த வயிற்றுப்புண் குணமடைய என்ன பழம் சாப்பிட வேண்டும் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு உண்டு. வயிற்று புண் உள்ளவர்கள், வயிற்று புண் குணமடைய ஆப்பிள் பழங்களை தினமும் அதிகளவு சாப்பிடலாம்.

ஆப்பிள்களில் உள்ள வளமான நார்ச்சத்து மற்றும் ப்ளேவோனாய்டுகள், அல்சரை விரைவில் சரிசெய்யும் செயல்முறையைத் தூண்டி, அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

எனவே வயிற்று புண் குணமடைய பழம் என்ன சாப்பிடலாம் என்று யோசிக்காமல் தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிடுங்கள். குடல் புண் என்று சொல்லக்கூடிய அல்சர் நோய் உடனே சரி ஆகிவிடும்.

வயிற்று புண் குணமடைய உணவு

வயிற்று புண்ணால் அவதியா? – அகத்தி கீரை சூப் குடிங்க:

Vayiru pun patti vaithiyam in tamil – இந்த வயிற்று புண் மருத்துவம் அகத்திகீரையை நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்பு அதனுடன் இரண்டு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு, ஒரு கையளவு துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக வேக வைக்கவும்.

பின்பு அவற்றில் இருக்கும் சூப்பை குடிக்கவும்.

வாரத்தில் இரண்டு முறை இந்த vayiru pun marunthu அகத்திகீரை சூப்பை குடித்து வர குடல்புண் மற்றும் வயிற்றுப்புண் பிரச்சனை சரியாகும்.

அல்லது:

குடல்புண் மருத்துவம் துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்து கடைந்துகொள்ளவும்.

அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாக தினமும் செய்து சாப்பிடலாம்.

குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..!

வயிற்றுப்புண் மருத்துவம் அருகம்புல் ஜூஸ்:

Vayiru pun patti vaithiyam in tamil – குடல்புண் மருத்துவம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் (vayiru pun marunthu) குடித்து வர அல்சர் பிரச்சனை மட்டுமல்லாமல் பல வகையான பிரச்சனைகளும் சரியாகும்.

இந்த ஜூஸ் குடித்த 1 மணி நேரம் கழித்த பின் மற்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.

குடல்புண் மருத்துவம் மணத்தக்காளி கீரை சூப்:

Vayiru pun patti vaithiyam in tamil – வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒன்றுதான் மணத்தக்காளி கீரை.

இவற்றை சூப் செய்து தினமும் மூன்று வேலை குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் பிரச்சனைகள் சரியாகும்.

மணத்தக்காளி வயிற்றுப் புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது. மணத்தக்காளி கீரையை வாரம் 3 நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கீரை கிடைக்கவில்லையென்றால் மணத்தக்காளி வற்றலை கடைகளில் வாங்கி வற்றல் குழம்பாகவும் அல்லது பொரித்தும் தினமும் சாப்பிடுங்கள்.

குடல்புண் மருத்துவம் தேங்காய் பால்:

Vayiru pun patti vaithiyam in tamil – வயிற்றுப்புண் மருத்துவம் தேங்காய்பாலை தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் வயிற்றில் குளிர்ச்சி ஏற்படுவதுடன், புண்களும் விரைவில் ஆறும். தேங்காயையும் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

குடல்புண் மருத்துவம் மூலிகை பொடி:

Vayiru pun patti vaithiyam in tamil – வயிற்று புண் மருத்துவம் ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம்.

இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

அல்சர் குணமாக பாட்டி வைத்தியம் ..! அல்சர் முற்றிலும் குணமாக Patti Vaithiyam..!

குடல்புண் மருத்துவம் மாதுளை ஜூஸ்:

Vayiru pun patti vaithiyam in tamil – வயிற்று புண் குணமடைய பழம் வகையில் மாதுளை பழம் இடம் பெற்றுள்ளது வயிற்றுப்புண் மருத்துவம் மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக (vayiru pun marunthu) எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

குடல்புண் மருத்துவம் மோர்:

Vayiru pun patti vaithiyam in tamil – வயிற்றுப்புண் மருத்துவம் கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், போன்றவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதிலிருந்து தினமும் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால் நாளடைவில் அல்சர் குணமாகும்.

வயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் சிலவற்றை இங்கு இப்போது படித்தறிவோம்…

வயிற்று புண் குணமடைய உணவு / vayiru pun vaithiyam in tamil

குடல்புண் மருத்துவம் – அல்சர் உள்ளவர்கள் உணவு முறை:

சத்தான உணவுகளை தினமும் அதிகம் சாப்பிட வேண்டும்.

சரியான நேரத்திற்குள் உணவு அருந்த பழகவேண்டும்.

காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல இருந்தாலும் பால் கலக்காத டீயை குடிக்க கூடாது. அதே போல் தினமும் டீ குடிக்கும்  அளவை குறைத்து கொள்ள வேண்டும்.

வயிற்று கோளாறை ஏற்படுத்தும் எந்த உணவுகளையும் சாப்பிட கூடாது.

முக்கியமாக மிகவும் சூடான உணவுகளையும் சாப்பிட கூடாது.

குளிர்ச்சி அளிக்கக்கூடிய பானமான தயிரை தினமும் குடிக்கலாம்.

வாழை பழம் தினமும் சாப்பிட்டு வர குடல்புண்ணை ஆற்றும் தன்மை உடையது எனவே தினமும் அதிகளவு வாழை பழம் சாப்பிடலாம்.

தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

வயிற்றில் வலி ஏற்படும் போது ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய்விடும்.

அல்சர் உள்ளவர்கள் பால் சாப்பிட வேண்டும் என்று யாரும் சிபாரிசு செய்ததில்லை.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil