வல்லாரை கீரை தீமைகள் என்ன.? அதனை யார் சாப்பிட கூடாது.?

Advertisement

வல்லாரை கீரை தீமைகள் | Vallarai Keerai Side Effects in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வல்லாரை கீரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். வல்லாரை கீரை பற்றி அறியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. நினைவாற்றலை அதிகரிக்கக்கூடியது என்றால், அது வல்லாரை கீரை தான் என்று நம் அனைவருக்கும் தெரியும். வல்லாரை கீரையில் துவையல் செய்து சாப்பிடுவார்கள்.

மூலிகை தாவரங்களில் மிகவும் முக்கியமான கீரை வல்லாரை கீரை ஆகும். வல்லாரை கீரை நம் உடலுக்கு பல விதமான ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், இதனை அதிகமாக சாப்பிடும்போது ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது.

வல்லாரை கீரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

வல்லாரை கீரை தீமைகள்

  • வல்லாரை கீரை அதிகம் சாப்பிடுவதால் ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட வாய்ப்புள்ளது. வல்லாரை கீரை சாப்பிடும் நபர்களில் ஒரு சிலருக்கு தோல் வெடிப்பு, அரிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்ப வாய்ப்புள்ளது.
  • வல்லாரை கீரை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் திறனுடன் தொடர்புடையது ஆகும். இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ளவர்களுக்கு வல்லாரை கீரை மேலும், ஆபத்தை விளைவிக்கும்.
  • அளவுக்கு அதிமாக வல்லாரை கீரையை எடுத்துக்கொண்டால், தலைவலி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • முக்கியமாக, வல்லாரை கீரை அதிகமாக சாப்பிடும்போது, வலிப்பு நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. வல்லாரை கீரை ஆனது, மூளையில் ஏற்படுகிற வேதிப் பொருட்களை அதிக அளவில் தூண்டிவிடும். எனவே, இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது வலிப்பு நோய் ஏற்படலாம்.
  • வல்லாரை கீரை வல்லாரை கீரையில் உள்ள ஆக்சலேட்கள் சிறுநீரக கற்களை உருவாக்கலாம். எனவே, சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு அல்லது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் உள்ளவர்களுக்கு வல்லாரை கீரை மேலும், பாதிப்பை ஏற்படுத்தலாம்.
  • எனவே, வல்லாரை கீரை அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது.

வல்லாரை கீரை சமையல் ரெசிப்பீஸ்..!

வல்லாரை கீரை யார் சாப்பிட கூடாது.?

  • அழற்சி உள்ளவர்கள் வல்லாரை கீரையை அதிகமாக சாப்பிட கூடாது.
  • வலிப்பு நோய் உள்ளவர்கள் அழற்சி வல்லாரை கீரை சாப்பிட கூடாது.
  • சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் வல்லாரை கீரை அதிகமாக சாப்பிட கூடாது.

கர்ப்பிணி பெண்கள் வல்லாரை கீரை சாப்பிடலாமா.?

வல்லாரை கீரை கருப்பை தூண்டும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும், கர்ப்ப காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்  உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அல்லது மருத்துவரின் அனுமதி பெற்ற பிறகு சாப்பிட வேண்டும்.

பிரண்டை பயன்கள் | பிரண்டை யார் சாப்பிடக்கூடாது..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil

Advertisement