வால்நட் தீமைகள்
வணக்கம் நண்பர்களே 🙏 இன்று நம் ஆரோக்கிய பதிவில் வால்நெட் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே நாம் எதை நல்லது என்று அதிகமாக எடுத்துக்கொள்கிறோமே அதே நமக்கு அதிகமான கெடுதல்களை விளைவிக்கிறது. இந்த வால்நெட் ஆனது அதிக சத்துக்கள் நிறைந்த உணவு பொருளாகும். இதை அக்ரூட் பருப்புகள் என்றும் சொல்வார்கள். மேலும் இதனை அதிகம் சாப்பிடுவதால் எற்படும் தீமைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
வெந்தயம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா.? |
வால்நெட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
வால்நெட் கொட்டைகளில் அதிகமான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை அதிகமாக சாப்பிடும் பொழுது இரைப்பை குடலில் பிரச்சனைகளை உண்டாகும். இந்த வால்நெட் செரிமான கோளாறுகளுக்கு உதவுகிறது என்றாலும் சில சமயங்களில் பிரச்சனைகளை உண்டாக்கும், எனவே செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு உபயோகிப்பது நல்லது.
இந்த வால்நெட்டை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது குமட்டல், மூச்சி விடுவதில் சிரமம், எச்சி முழுங்குவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும் முகத்தில் அலர்ஜி கண் அரித்தால் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்க செய்கிறது.
ஒரு சிலருக்கு ஒவ்வாமை அறிகுறிகள், அலர்ஜி போன்ற ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் இந்த பருப்புகளை சாப்பிடுவதற்கு முன்னாள் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும்.
வால்நெடியில் அதிகமான நார்ச்சத்துக்கள் இருப்பதினால் ஒரு பக்கம் உடல் எடையை குறைத்தாலும், ஆனால் அதில் அதிகமான கலோரிகள் இருப்பதினால் ஒருபக்கம் உடல் எடையை அதிகரிக்கவும் செய்க்கிறது. ஏழு வால்நெட் பருப்புகளில் மட்டும் 153 கலோரிகள் இருக்கிறது, எனவே இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
நான்கு வால்நெட்யில் மட்டுமே 140 கலோரிகள் இருக்கிறது, எனவே அதனை மட்டும் தனியாக சாப்பிடாமல், உணவில் சேர்த்து சாப்பிடுவதினால் கொஞ்சம் நன்மைகள் இருக்கும்.
இந்த வால்நெட் பருப்புகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது மூச்சி விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தி, மூச்சு திணறல் உண்டாகிறது. எனவே ஏழு வயதிற்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பருப்பை முழுசாக கொடுக்காமல் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
சிலருக்கு வயிற்றில் எரிச்சல், புண்கள் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த வால்நெட் பருப்பை சாப்பிட கூடாது. அப்படி மீறி அதிகமாக எடுத்துக்கொண்டால், வயிற்றில் ஏற்படும் புண்கள் பெரிதான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மேலும் இந்த வால்நெட் பருப்புகளை எடுத்துக்கொள்ளும் பொழுது கொஞ்சமாக உணவுகளில் எடுத்துக்கொள்வது நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல எந்த ஒரு உணவு பொருட்களையும் எடுத்துக்கொள்ளும் பொழுது கொஞ்சமாக எடுத்துக்கொள்வது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |