வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வால் மிளகு அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் தீமைகள்..!

Updated On: April 25, 2025 3:55 PM
Follow Us:
Vaal Milagu Theemaigal in Tamil
---Advertisement---
Advertisement

வால் மிளகு தீமைகள் | Vaal Milagu Theemaigal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வால் மிளகு சாப்பிடுவதால் உடலிற்கு ஏற்படும் தீமைகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். மிளகு பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், வாழ் மிளகு பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  எனவே, அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

வால் மிளகு என்பது இருவித்திலை தாவரம் ஆகும். மிளகின் அடிப்பகுதியில் வால் போன்ற நீட்சியை கொண்டிருப்பதால் வால் மிளகு என்று அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வால் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நம் உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், அதிகமாக பயன்படுத்தும்போது பல தீமைகளையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. எனவே, வால் மிளகின் தீமைகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் அதன் தீமைகள் பற்றி விவரித்துள்ளோம்.

வால்மிளகு என்றால் என்ன.?

வால்மிளகு என்பது மரத்தில் படர்ந்து வளரும் பலபருவக் கொடித் தாவரம் ஆகும். இதனை ஜாவா, தாய்லாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவு போன்ற பகுதிகளில் பயிர் செய்கின்றனர். இது காரமும், சற்று கசப்பு சுவை கொண்டதாகவும் இருக்கிறது.

மூலக் கடுப்பு, வயிற்றுக் கடுப்பு முதலான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் சித்த மருத்துவ மருந்துகளில் வால் மிளகு முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.

வால் மிளகு தீமைகள்

வால் மிளகு மருத்துவ குணங்கள்

வால் மிளகு அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்ப்படும் தீமைகள்:

  • வால் மிளகு காரத்துடன் கூடிய வலுவான சுவையுடையது. எனவே, இதனை அதிக அளவில் உட்கொள்ள கூடாது. அப்படி அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
  • வால் மிளகு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது. வயிற்று புண் மற்றும் வயிற்று எரிச்சல் உள்ளவர்கள் வால் மிளகை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது மேலும், வயிற்று எரிச்சலை அதிகப்படுத்தும்.
  • வால் மிளகு ஆண்மை குறைவு பிரச்சனையை சரிசெய்யக்கூடியது. இதனால், பல ஆண்கள் வால் மிளகை அதிக அளவிலும் அடிக்கடியும் உட்கொண்டு வருவார்கள். ஆனால், வால் மிளகை அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. அப்படி அதிகமாக எடுத்து கொண்டால் ஆண்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.
  • வயதானவர்கள், வால் மிளகினை அதிகமாக எடுத்துக்கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.
  • எனவே, வால் மிளகினை குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறி பயன்படுத்தினால் மேற்கூரிய பக்கவிளைவுகள் ஏற்படும்.
  • குழந்தைகளுக்கு இதனை குறைவான அளவே கொடுக்க வேண்டும். ஏனென்றால் இவர்களுக்கு அதிகமாக கொடுப்பதன் மூலம் வயிற்று பிரச்சனையை ஏற்படுத்த கூடும்.

ஆண்களுக்கு வால் மிளகு தீமைகள்:

கருப்பு வால் மிளகை ஆண்கள் எடுத்து கொள்வதன் மூலம் ஆண்மை குறைவை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வேறு விதமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். அதனால் வால் மிளகை அதிகமாக எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இதனை ஆண்கள் மட்டுமில்லை எல்லாருமே இதனை அளவோடு எடுத்து கொள்வது நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே ஆனாலும் நஞ்சை தான் ஏற்படுத்தும்.

1 கைப்பிடி அளவு வால் மிளகை போதும் தீராத கடன் தொல்லையும் தீர..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now