விளக்கெண்ணெய் தீமைகள்
நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயானது ஒவ்வொரு பயனை கொண்டுள்ளது. அதில் சில நன்மைகள் தெரிந்திருக்கும். சில நன்மைகள் தெரிந்திருக்காது. அதில் நல்லெண்ணெய் உடலிற்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். தேங்காய் எண்ணெய் தினமும் தலைக்கு வைப்பதால் தலை வறண்டு போகாமல் இருக்கும்.
இதெல்லாம் நமக்கு தெரிந்த கதை தான். ஆனால் நாம் பயன்படுத்தும் எல்லா உணவு பொருட்களிலும் நன்மைகள் மட்டும் இருக்காது. தீமைகளும் நிறைந்திருக்கும். அதனால் அதனை பற்றி அறிந்து கொள்வதும் அவசியமானது. அதனால் இந்த பதிவில் விளக்கெண்ணெய் தீமைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
விளக்கெண்ணெய் தீமைகள்:
மலச்சிக்கல்:
விளக்கெண்ணெயின் முக்கிய பயனே மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவதாக இருந்தாலும், அதனை அதிகமாக பயன்படுத்தும் போது உடலில் உள்ள நீர் சத்து குறைந்து மலசிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
வயிற்றுப்போக்கு:
சில நபர்களுக்கு விளக்கெண்ணெய் பயனப்டுத்தினால் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். அதிலும் வெறும் வயிற்றில் விளக்கெண்ணையை பயனப்டுத்தினால் வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
தோல் எரிச்சல்:
விளக்கெண்ணெய் ஆனது செண்ஸ்டிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு தோலில் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் தோலில் சொறி, சிரங்கு, வீக்கம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு:
கர்ப்பிணிகள் விளக்கெண்ணெய் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்க கூடும். ஏனென்றால் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தி கரு கலைவதற்கு வழிவகுக்கிறது.
விளக்கெண்ணெய் குளியலில் இவ்வளவு நன்மை இருக்கிறதா ?
குழந்தைகள்:
குழந்தைகள் மலம் கழிக்கவில்லை என்றால் உடனே விளக்கெண்ணெயை தான் பயன்படுத்துவார்கள். 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் கொடுக்க கூடாது. ஏனென்றால் இவை குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனையை ஏற்படுத்தும்.
முன்னெச்சரிக்கை:
உங்களுக்கு ஏதாவது உடல்நல பிரச்சனை இருந்தால் நீங்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் விளக்கெண்ணையை பயன்படுத்த கூடாது.
விளக்கெண்ணெயை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள கூடாது.
விளக்கெண்ணெய் பல நன்மைகளை கொண்டிருந்தாலும், அதை எப்போதும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் அல்லது தவறான முறையில் பயன்படுத்தினால் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதனால் விளக்கெண்ணெயை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |