வெங்காய தோல் நன்மைகள் | Benefits of Onion Peel in Tamil

Benefits of Onion Peel in Tamil

வெங்காய தோலின் பயன்கள் | Onion Peel Use in Tamil

சமையல் என்றாலே வெங்காயத்திற்கு ஒரு தனி இடம் இருக்கிறது. வெங்காயம் இல்லாமல் ஒரு சமையல் முழுமை பெறாது. இயற்கையான முறையில் கிடைக்கும் அனைத்து பொருளுக்குமே நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளில் மேல்புறத்தில் தோல் பகுதி அமைந்திருக்கும். அதில் ஒன்றுதான் இந்த வெங்காய தோல். எல்லோருமே வெங்காயத்தை மட்டும் நறுக்கி சமையலுக்கு பயன்படுத்திவிட்டு அதனுடைய தோல் பகுதியினை குப்பை தொட்டியில் போடுவதை வழக்கமாக வைத்திருப்போம். நாம் எதை குப்பையில் போடுகிறோமோ அதில்தான் பல சத்துக்கள் அடங்கியுள்ளது. வாங்க வெங்காய தோல் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்..

பூசணி விதை நன்மைகள்

செடிகள் செழிப்பாக வளர:

 வெங்காய தோல் நன்மைகள்

வீட்டில் வளர்க்கக்கூடிய செடிகள் நன்றாக வளருவதற்கு முதலில் நாம் அதற்கான உரங்களை போட வேண்டும். வெங்காய தோல் எளிதில் மக்கக்கூடிய பொருள் என்பதால் செடிகளுக்கு மிகவும் ஊட்டச்சத்தினை கொடுக்கிறது. வெங்காய தோலினை காய்கறிகளுக்கு, செடிகளுக்கு போட்டு வந்தால் செடி நன்றாக வளர்ச்சியடையும்.

அலர்ஜி நீங்க:

 benefits of onion peel in tamil

அலர்ஜி பிரச்சனை ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்குமே இயல்பாக வரக்கூடிய பிரச்சனை. அலர்ஜி பிரச்சனையை நாம் ஆரம்பத்திலே பார்த்து சரிசெய்து விட வேண்டும். இல்லையெனில் பெரிய பிரச்சனையை சந்திக்க வாய்ப்பு நேரிடும். அலர்ஜி சமபந்தமான பிரச்சனைக்கு வெங்காயத்தோலை தண்ணீரில் போட்டு வைக்கவும். ஒரே இரவில் வெங்காய தோலில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிந்துவிடும். இந்த நீரினை உடம்பில் தடிப்புகள் இருக்கும் இடங்களில், ஒவ்வொமை பிரச்சனைக்கு மற்றும் தோலில் வெடிப்புகள் உள்ள இடங்களில் பயன்படுத்தி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

முடி அடர்த்தியாக வளர:

 வெங்காய தோலின் பயன்கள்

இன்றைய சூழலில் அதிக மன அழுத்தத்தால் பாகுபாடின்றி பெண்கள் மற்றும் ஆண்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. முடி உதிராமல் வளர்ச்சி அடைவதற்கு சிறிதளவு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வெங்காய தோலினை சேர்த்து அதன் நிறம் மாறும்வரை கொதிக்க வைக்கவும். வெங்காய தோலில் இருக்கும் சாறு அந்த நீரில் இறங்கி நீரினுடைய நிறம் சிவப்பு நிறத்தில் மாறும். இப்போது அடுப்பை அணைத்து அதனை வடிகட்டிக்கொள்ளவும். இந்த நீரினை வேர்க்கால்களில் படும்படி தலை முழுவதும் தடவி வைத்திருந்து முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் தலைமுடி உதிரும் பிரச்சனை குறைந்து முடி வளர்ச்சியை கொடுக்கும்.

வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வீட்டில் ஈ மற்றும் பூச்சிகள் வராமல் இருக்க:

 onion peel use in tamil

உடலில் தொற்று நோய்கள் ஏற்பட காரணமாக இருப்பது ஈக்கள் மற்றும் கொசுக்கள் வீட்டிற்குள் அதிகமாக வருவதால் தான். வீட்டில் இந்த பூச்சுக்கள் தொல்லை வராமல் இருக்க ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெங்காய தோல்களை போட்டு ஜன்னல் மற்றும் கதவுகளின் ஓரத்தில் வைக்கவேண்டும். வெங்காய தோலின் வாசனைக்கு ஈக்கள் மற்றும் கொசுக்கள் வீட்டிற்குள் நுழையாது.

தூக்கம் வர:

 வெங்காய தோல் நன்மைகள்

நீங்கள் க்ரீன் டீ அல்லது டீ பேக்ஸ் உபயோகப்படுத்துவராக இருந்தால் ஒரு பவுலில் சிறிதளவு வெங்காய தோல்களை போட்டுக் கொள்ளுங்கள். அதில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் வடிகட்டி அதனுடன் டீ பேக் போட்டு குடித்து வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். அதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மூளையை தளர்வு செய்து தூக்கத்தை வரவழைக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil