கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள் | Summer Health Tips in Tamil

Advertisement

வெயில் கால உணவுகள் | Healthy Food Items in Tamil

வணக்கம் நண்பர்களே..! இந்த பதிவில் கோடை காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகளை பற்றி பார்க்க போகிறோம். கோடைகாலத்தில் பலவிதமான நோய்கள் வரும். அது நமக்கு வருவதற்கான காரணம் நம் உடலுக்கு தேவையான சத்துகள்  இல்லாததால் வரும். அதிகம் வியர்வை, முகப்பருக்கள் இந்த மாதிரியான பிரச்சனைகள் வரும். இது போன்ற பிரச்சனைகள் வரமால் இருக்க பின் வரும் பதிவுகளை படித்து தெரிந்துகொள்ளலாம்.

கோடை கால ஆரோக்கிய டிப்ஸ்

முலாம்பழம் ஜூஸ் நன்மைகள்:

Summer Health Tips in Tamil 

 

  • கோடை காலத்தில் முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் கண் எரிச்சல், கண் சூடு போன்ற எந்த பிரச்சனையும் நமக்கு வராது. உடலுக்கு தேவையான நீர் சத்துகளை அளிக்கிறது. இதனால் உடலில் ஏற்படும் சூட்டு கட்டி வராமல் இருக்கும்.

தினமும் இளநீர் குடிப்பதால் | Elaneer Nanmaigal in Tamil 

Elaneer Nanmaigal in Tamil 

  • வெயில் காலம் என்றால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வருவது இளநீர். இளநீர் என்றால் அதன் சுவையோ தனி அதுபோல் தான் அதில் உள்ள சத்துகளும. நம் உடலுக்கு தேவையான பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்ற சத்துகளை உள்ளடக்கி உள்ளதால் அதனை வெயில் காலத்தில் அருந்துவது நல்லது.
உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ்

ஸ்ட்ராபெரி பழத்தின் நன்மைகள்:

ஸ்ட்ராபெரி பழத்தின் நன்மைகள்

  • ஸ்ட்ராபெர்ரி, ப்ளு பெர்ரி, ப்ளாக் பெர்ரி என பல விதமான பெயர்களில் அழைக்கப்படும் ஸ்ட்ராபெரி பழம். இந்த பழத்தில் அதிகம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது இதனை தினம் ஒரு பழமாவது எடுத்துகொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள சத்துகள் கெட்ட இரத்தத்தை வெளியாக்கி நல்ல இரத்தத்தை ஊற வைக்கும். நல்ல இரத்தம் உடலில் இருப்பதால் வெயில் காலத்தில் வெளியில் செல்லும் பொழுது உடல் வெப்பத்தை தாங்கும் சக்தியை தருகிறது.

வெந்தயம் தரும் நன்மைகள்:

வெந்தயம் தரும் நன்மைகள்

  • வெந்தயம் என்றால்  பிள்ளைகளுக்கு பிடிக்காது. ஆனால் அதில் உள்ள சத்துகள் ஏராளம். அதனை தினமும் ஊற வைத்த நீரை குடித்து வர கோடைகாலத்தில் தொண்டையில் வறட்சி வராமல் தடுகிறது. உடலுக்கு தேவையான நீர் சத்துகளை தருகிறது. வெந்தயம் மிகவும் குளிர்ச்சி தன்மை உடையது. மேலும் இதனை தினமும் ஊறவைத்த தண்ணீரையோ அல்லது சாதாரணமாக சாப்பிட்டு வந்தால் நீர்கடுப்பு சிறுநீர் கோளாறுகள் வராமலும் தடுகிறது.
குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சிகோங்க..!

சிட்ரஸ் பழச்சாறு:

Summer Health Tips in Tamil 

  • சிட்ரஸ் பழம் என்றால் அதில் அதிக அளவு வைட்டமின் சி சத்துகள் நிறைந்து இருக்கும். வெயில் காலத்தில் அதிகம் உடலுக்கு தேவைபடுவது நீர் சத்துகள் தான். நீர் சத்துகள் அதிகம் நிறைந்துள்ள  சிட்ரஸ் பழங்களில் தான். வெயில் காலங்களில் நோய் தொற்றை எதிர்த்து போராட உதவுவது ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை, கிவி, கொய்யா இந்த மாதிரியான பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கோடைகாலங்களில் சிட்ரஸ் பழங்களில் தினமும் ஜூஸ் குடித்து வர நீர் சத்துகள் குறையாமல் உடலுக்கு வெயிலை தாங்கக்கூடிய சக்தியை தருகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement