வெள்ளை சோளம் தீமைகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வெள்ளை சோளம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி கொடுத்துள்ளோம். வெள்ளை சோளத்தை ஆங்கிலத்தில் Great millet என்று கூறுவார்கள். இதனை தவிர்த்து வெள்ளை சோளத்தை சொர்கம் (Sorghum) என்றும் கூறுவார்கள். சிறுதானியங்கள் வகைகளில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. பெரும்பாலும், உடலிற்கு நன்மைகள் அளிக்கக்கூடியது சிறுதானியங்கள் தான். அக்காலத்தில் எல்லாம் தானிய வகைகளை தான் அதிகம் உட்கொண்டு வந்தார்கள். ஆனால், தற்போது பெரும்பாலும் அரிசி உணவுகளை மட்டுமே உட்கொண்டு வருகிறோம்.
அதிலும், இப்போது வளரும் குழந்தைகளுக்கு சிறு தானியங்கள் பற்றி தெரியவே தெரியாது. சிறுதானியங்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ள வெள்ளை சோளத்தில் எக்கசக்க ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. வெள்ளை சோளத்தில் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்டுகள், பி வைட்டமின்கள், ஃபிளாவனாய்டுகள், பீனாலிக் அமிலங்கள், டானின்கள் போன்றவை அடங்கியுள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், வெள்ளை சோளத்தில் அதிக சத்துக்கள் இருக்கிறது என்பதற்காக இதனை அதிகம் உட்கொண்டு வந்தால், உடலில் பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
சோளம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா.?
வெள்ளை சோளம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
- வெள்ளை சோளத்தில், (White Sorghum) பெரும்பாலும் நன்மைகளே அடங்கியுள்ளது. வெள்ளை சோளம் சாப்பிடுவதால் உடலிற்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் இது ஒரு சிலருக்கு பல விதமான பக்கவிளைவுகளை ஏற்படத்தலாம்.
- வெள்ளை சோளம் சாப்பிடும், சிலருக்கு அலர்ஜி சொறி சிரங்கு வரும். கைவிரல் இடுக்குகளில் சிரங்கு வரும்.
- வெள்ளை சோளத்தில் குறைந்த அளவே நார்சத்து உள்ளது. அதாவது பழுப்பு அல்லது சிவப்பு சோளத்தினை விட வெள்ளை சோளத்தில் நார்ச்சத்து குறைவாகவே உள்ளது. அதேபோல் ஆன்டிஆக்ஸிடன்கள் குறைவாக உள்ளது.
- வெள்ளை சோளம் சாப்பிடும் சிலருக்கு வாயு பிரச்சனை, குடல் அசதி போன்றவை ஏற்படக்கூடும்.
- வெள்ளை சோளங்களில் அதிக அளவில் கீலேட்டிங் பொருட்கள் (Chelating Agents) உள்ளது. இது சிறுநீரக மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படுத்தக்கூடும். சிலருக்கு வெள்ளை சோளம் அஜீரண கோளாறு ஏற்படவும் உள்ளது.
- வெள்ளை சோளத்தினை பச்சையாக சாப்பிடக் கூடாது. ஏனென்றால் சில சோள வகைகளில், சயனோஜெனிக் குளைக்கோசைடுகள் (Cyanogenic Glycosides) இருக்கும். இது உடலில் அதிகம் சேரும்போது விஷமாக மாறக்கூடும். ஆகையால், சோளத்தினை சரியான அளவில் சமைத்து சாப்பிட வேண்டும்.
- வெள்ளை சோளத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் வெள்ளை சோளத்தினை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் வெள்ளை சோளத்தினை அதிகம் உட்கொண்டால் இத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாது.
மெது வடை, மசால் வடை சாப்பிட்டிருப்பீங்க.! சோளம் வடை சாப்பிட்டிருக்கீங்களா.!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |