10 அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் – அது என்ன ?

cinnamon water

10 அற்புதங்களை நிகழ்த்தும் இலவங்கப் பட்டை தண்ணீர் (cinnamon water):

இலவங்கப் பட்டை என்பது சாதாரணமாக நாம் சமைக்கும்  ஒரு மசாலா பொருளாகும். இந்த இலவங்கப் பட்டை உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமின்றி ஏராளமான ஆரோக்கிய குணங்களையும் கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே இந்த இலவங்க பட்டை மருத்துவ பயனுக்கு மற்றும் அழகு குறிப்புக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பட்டையில் உள்ள ஒருவகையான அரோமேட்டிக் பொருள் சமைக்கும் உணவின் சுவையை அதிகரிப்பதோடு, உணவில் அதிக நறுமணத்தை வீச செய்கிறது.

பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் இவற்றின் இராஜாங்கம் அதிகம் இருக்கும்.

இந்த பட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், மக்னீசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

இந்த பட்டையில் அடங்கியுள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நமக்கு ஏற்படும் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.

மேலும் கருவுற்ற காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு, சுவாச பிரச்சனைகளுக்கு, ஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக உதவுகிறது.

எனவே இந்த இலவங்க பட்டையில் இத்தனை மருத்துவப்பயன்கள் அடங்கியுள்ளதால், தினமும் இலவங்கபட்டை தண்ணீரை (cinnamon water) குடித்துவந்தால் பல நம்மைகள் நிகழும்.

வாருங்கள் தினமும் இலவங்கபட்டை தண்ணீரை (cinnamon water) குடிப்பதினால் என்னென்ன பயன்களை பெறமுடியும் என்று இந்த பகுதியில் நாம் காண்போம்.

இலவங்க பட்டை பயன்கள்..!

உடல் எடையை குறைக்க:

உடல் எடையை குறைப்பதற்கு இலவங்கபட்டை ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. எனவே ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி அவற்றுள் ஒரு சிறிய இலவங்கபட்டை துண்டுகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும், பின்பு அவற்றை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் மிக எளிதில் உடல் எடையை குறைத்துவிட முடியும்.

மேலும் இந்த பானம் நம் உடலில் உள்ள வேண்டாத நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளுக்கு இது ஒரு சிறந்த நிவாரணம்:

தேச தாவிரயியல் மையம் மேற்கொண்ட ஆராய்ச்சி படி பார்த்தால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த இலவங்கபட்டை(cinnamon water) தண்ணீரை குடிப்பதன் மூலம், அப்போது ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு இலவங்கபட்டையில் உள்ள அனல்கெஸிக் (வலி நிவாரணி பொருட்கள் ) மற்றும் இரத்த உறைதலுக்கான எதிர்ப்பு பொருள் போன்றவை மாதவிடாய் வலியையும் அதிகப்படியான இரத்தம் வெளியேறுவதையும் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

இந்த இலவங்க பட்டை தண்ணீரில் (cinnamon water) ஆன்டி ஆக்ஸிடன்ட்களான பாலிஃபீனால் மற்றும் புரோன்தோசயனின்ஸ் போன்றவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது .

மேலும் இதில் நோய் எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் மற்றும் ஆன்டி வைரல் பொருட்கள் போன்றவை இதய நோய்கள் மற்றும் சுவாச நோய்கள் வராமல் தடுக்கிறது.

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க:

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க இலவங்க பட்டை தண்ணீர்(cinnamon water) மிகவும் பயனுள்ள மருந்தாக விளங்குகிறது. இந்த இலவங்க பட்டை தண்ணீர் நமது மூளையின் செயல்பாடுகளையும், நினைவாற்றல்களையும் அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த இலவங்க பட்டை தண்ணீர் மூளை பதிப்புகளாக வரும் பார்கின்சன் நோய் மற்றும் அல்சைமர் நோய் போன்ற நோய்களின் வேகத்தை குறைக்க இந்த இலவங்க பட்டை தண்ணீர் பெரிதும் உதவுகிறது.

பல் வலிக்கு:

தினமும் பல் வலியால் அவஸ்தை படுபவர்களா நீங்கள் அப்போ கவலையை விடுங்கள். தினமும் இந்த இலவங்கபட்டை(cinnamon water) தண்ணீரை குடித்து வந்தால் பல்வலி மற்றும் பல் ஈறுகளில் ஏற்படும் வீக்கங்கள் குறைந்து விடும்.

மேலும் சிலருக்கு வாய் துர்நற்றம் அடிக்கும் அவர்கள் கூட இந்த இலவங்கபட்டை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் இந்த பிரச்சனை சரியாகும்.

நீரிழிவு நோய்க்கு:

இலவங்கபட்டை தண்ணீரில் பாலிபினோல் என்ற, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து, டைப் 2 டயாபெட்டீஸ் வராமல் தடுக்கிறது.

மேலும் நீரிழிவு நோயாளிகள் இந்த இலவங்கபட்டை(cinnamon water) தண்ணீரை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம்.

பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் பிரச்சனையை குறைத்தல்:

பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் என்பது ஒரு ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையாகும். இது பொதுவாக பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.

எனவே இதற்கு இலவங்கபட்டை தண்ணீரை குடித்து வந்தால் இந்த நோய்களிருந்து தப்பிக்கலாம்.

மேலும் இவை பெண்களின் இன்சுலின் எதிர்ப்பு பொருளை குறைத்து பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் பிரச்சினையை குறைக்கிறது.

புற்று நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கிறது:

இலவங்கபட்டையில் உள்ள ஆன்டி கார்சினோஜெனிக் என்ற பொருள் புற்றுநோய் செல்கள் வருவதை குறைக்கிறது. எனவே தினமும் இந்த இலவங்க பட்டை தண்ணிரை குடித்து வந்தால் நமக்கு புற்று நோய் வராமல் காத்துக்கொள்ள முடியும்.

கேக்கும் திறனை அதிகரிக்கிறது:

தங்களுக்கு காது சரியாக கேட்கவில்லை என்றால், அதற்கு இந்த இலவங்க பட்டை தண்ணீர் பெரிதும் பயன்படுகிறது. எனவே தினமும் இந்த இலவங்க பட்டை தண்ணிரை குடித்து வந்தால் கேக்கும் திறனை அதிகரித்து கொள்ள முடியும்.

சரும பராமரிப்புக்கு:

தினமும் இலவங்க பட்டை தண்ணீரை குடித்து வந்தால் சருமத்தையும், சருமத்தில் உள்ள நிறத்தையும் பாதுகாக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடுகிறது. எனவே நச்சுகள் நமது சருமத்தில் தங்காமல் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், இந்த இலவங்கபட்டை தண்ணீரை தினமும் அருந்தி பலன் பெறலாம்.

பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Tamil maruthuvam tips
SHARE