20 வகை நோய்களுக்கு எளிய நாட்டு மருத்துவ குறிப்புகள் (Nattu maruthuvam)!!!

பாட்டி வைத்தியம்

20 வகை நோய்களுக்கு எளிய மருத்துவ குறிப்புகள்!!! சித்த மருத்துவம் குறிப்புகள்..!

நெஞ்சு சளி பிரச்சனைக்கு நாட்டு மருத்துவம்:-

Nattu maruthuvam/ nattu maruthuvam tamil tips – தேங்காய் எண்ணையில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அவை ஆறியதும் நெஞ்சில் தடவ நெஞ்சி சளி குணமாகும்.

தலைவலி குணமாக நாட்டு மருத்துவம் :-

10 துளசி இலை, சிறுதுண்டு சுக்கு மற்றும் 2 லவங்கம் ஆகியவற்றை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு குணமாக நாட்டு மருத்துவம் :-

சுக்கு, வெள்ளை மிளகு மற்றும் திப்பிலி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

தொடர் விக்கல் குணமாக நாட்டு மருத்துவம் :-

Nattu maruthuvam – நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட தொடர் விக்கல்  குணமாகும்.

வாய் நாற்றம் குணமாக நாட்டு மருத்துவம் :-

Nattu maruthuvam – சட்டியில் படிகாரத்தை போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்து தினமும் மூன்று வேலை சாப்பிட வாய் நாற்றம் குணமாகும்.

உதட்டு வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம் :-

பல பயன்களை தரும் மருத்துவ குறிப்பு..!

கரும்பு சக்கையை எரித்து சாம்பல் எடுத்து அதை வெண்ணையில் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு பிரட்சனைகள் குணமாகும்.

செரிமானம் நன்கு அடைய பாட்டி வைத்தியம் :-

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பில்லை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி குடிக்க செரிமானம் நன்கு அடையும்.

குடல் புண் குணமாக பாட்டி வைத்தியம் :-

nattu maruthuvam: மஞ்சளை அனலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். பின்பு அந்த சாம்பலை தேனில் கலந்து சாப்பிட குடல் புண் குணமாகும்.

வயிற்று வலி குணமாக பாட்டி வைத்தியம் :-

வெந்தியத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

மலச்சிக்கல் குணமாக பாட்டி வைத்தியம் :-

செம்பருத்தி இலையை காய வைத்து பொடி செய்து தினமும் சாப்பிட மலச்சிக்கல்  குணமாகும்.

சீத பேதி குணமாக பாட்டி வைத்தியம் :-

தினமும் மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் கலந்து சாப்பிட்டு வர சீத பேதி குணமாகும்.

பித்த வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம் :-

nattu maruthuvam: கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவு எண்ணையில் காய்ச்சி தினமும் பூசி வர விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

அனைவருக்கும் பயனுள்ள பாட்டி வைத்தியம்..!

மூச்சிப்பிடிப்பு தொல்லை குணமாக பாட்டி வைத்தியம் :-

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு வடித்த கஞ்சியில் சேர்த்து மீண்டும் சுடவைக்கவும். பின்பு அவற்றை மூச்சிப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேலை தடவினால் மூச்சிப்பிடிப்பு குணமாகும்.

சரும நோய்கள் குணமாக சித்த மருத்துவம் :-

nattu maruthuvam: கமலா ஆரஞ்சை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து, தினமும் சோப்புக்கு பதிலாக உடம்புக்கு தேய்த்து குளித்தால் சரும நோய்கள் குணமாகும்.

தேமல் குணமாக சித்த மருத்துவம் :-

வெள்ளை பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து குளித்து வர தேமல்  குணமாகும்.

மூலம் குணமாக சித்த மருத்துவம் :-

nattu maruthuvam: கருணைக் கிழங்கை கொஞ்சம் எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து சாம்பார் வைத்து சாப்பிட்டு வர மூலம் பிரட்சனைகள் குணமாகும்.

தீப்புண் குணமாக சித்த மருத்துவம் :-

வாழை தண்டை எரித்து அந்த சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தீப்புண் உள்ள இடத்தில் போட்டு வர விரைவில் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் ஆகியவை குணமாகும்.

மூக்கடைப்பு  குணமாக சித்த மருத்துவம் :-

nattu maruthuvam: ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து காலை மற்றும் மாலை என்று இருவேளை குடித்து வர மூக்கடைப்பு தொல்லை குணமாகும்.

வரட்டு இருமல் குணமாக சித்த மருத்துவம் :-

nattu maruthuvam: எலுமிச்சம் பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வர வரட்டு இருமல் குணமாகும்.

மூலிகை சாரும் அதன் பயன்களும் !!! நோய் தீர்க்கும் மருந்து

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil