கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்..!

Advertisement

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாத பழங்கள் | Natural Abortion Foods in Tamil | கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆரோக்கியம் பகுதியில் கர்ப்பிணி பெண்கள் கரு கலையாமல் இருக்க எந்தெந்த பழங்களை சாப்பிட கூடாது என்று தெரிந்துக்கொள்ளலாம். கர்ப்பமாக இருக்கும் காலத்தில் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக பழ வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்வோம். நாம் எடுத்துக்கொள்ளும் பழமே நம்முடைய கரு சிதைவை ஏற்படுத்திவிடும். குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்த மாதிரியான பழங்களை முற்றிலும் தவிர்த்துக்கொள்வது நல்லது. சரி வாங்க இந்த பதிவில் கர்ப்பிணிகள் எந்த வகையான பழங்களை அதிகமாக சாப்பிடக்கூடாது (abortion foods in tamil) என்று கீழே விரிவாக காண்போம்..

கர்ப்ப காலத்தில் என்ன மூலிகைகளை சாப்பிடகூடாது? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?

கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாதவை:

வைட்டமின் சி நிறைந்த பழங்கள் | Fruits that should not be eaten by pregnant women in tamil:

 abortion foods in tamil

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை பழங்கள்: வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ள பழங்களை மாதவிடாய் நெருங்கும் நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கரு உருவாகி இருந்தாலும் வைட்டமின் சி நிறைந்த பழத்தை சாப்பிடும் போது கர்ப்பிணிகளுக்கு கருவானது கலைவதற்கு வாய்ப்புள்ளது. கர்ப்பமாக இருக்கும் ஆரம்ப காலத்தில் அதிக அளவிற்கு வைட்டமின் சி பழங்களை சாப்பிட்டால் கரு களைய வாய்ப்புண்டு.

அன்னாசிப்பழம்:

 abortion natural foods in tamil

அன்னாசிப்பழத்தில் அதிகமாக ப்ரொமைலின் எனும் சொல்லக்கூடிய வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. அன்னாசியில் இருக்கக்கூடிய வேதிப்பொருள் உடலை பலவீனப்படுத்தி கர்ப்பப்பை வாயை தளரவைத்துவிடும். இதனால் கரு எளிமையாக கலைவதற்கு வாய்ப்புள்ளது. அன்னாசி பழத்தில் அதிகமாக வெப்பத்தன்மை இருப்பதால் உடலில் சூட்டை ஏற்படுத்தி கருவை கலைக்கும்.

பப்பாளி:

 natural abortion foods in tamil

பப்பாளி பழம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப நேரத்தில் அதிகமாக பப்பாளி சாப்பிட ஆசை தூண்டும். ஆனால் பப்பாளியில் அதிகமாக என்சைம்ஸ் மற்றும் கருவின் உடல் வளர்ச்சியை சிதைப்பதற்கு வாய்ப்புள்ளது. பாதியாக பழுத்த பப்பாளி பழத்தில் பாப் பைன் எனும் பொருளானது கருவை கலைக்க வாய்ப்புள்ளது. அதனால் கருவுற்ற ஆரம்ப காலத்திலே இந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் சப்போட்டா பழம் சாப்பிடலாமா?

கிரீன் டீ:

 கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை பழங்கள்

கிரீன் டீயில் பல நன்மைகள் உள்ளது. அதிகமாக வேலை பார்ப்பவர்கள் தல வலி என்றால் முதலில் அருந்துவது இந்த கிரீன் டீ. தலை வலிக்கு மட்டுமல்லாமல் புற்றுநோய், அதிக உடல் எடையை குறைப்பதற்கு, இதய சம்பந்தமான நோய்க்கு போன்ற பல உடல் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கிறது இந்த கிரீன் டீ. பல நன்மைகள் இருந்தாலும் கர்ப்பிணிகள் அதிகமாக எடுத்துக்கொண்டால் கரு கலைந்து போவதற்கு வாய்ப்புண்டு.

நண்டு: 

 கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை பழங்கள்

அசைவ உணவு என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. அதிலும் நண்டு என்றாலே அதிகமாக பிடித்த உணவாகும். நண்டில் கால்சியம் சத்து அதிகமாக இருந்தாலும் உடலுக்கு தேவையில்லாத கொழுப்புகள் அதிகமாக நிறைந்துள்ளது. அதனால் கர்ப்பிணி பெண்கள் நண்டுவை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது கர்ப்பப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தி இரத்த போக்கானது இறுதியில் கருசிதைவினை உண்டாக்கிவிடும். எனவே அசைவ உணவுகளில் நண்டு அதிகமாக பிடித்தவர்களாக இருந்தாலும் நண்டு சாப்பிடுவதை கர்ப்பிணிகள் தவிர்க்கவும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil
Advertisement