சிசேரியன் செய்த பெண்கள் சாப்பிட வேண்டிய உணவு முறைகள் | Cesarean Delivery Food in Tamil

Advertisement

சிசேரியன் செய்த பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் 

இன்றைய தலைமுறையில் உள்ள பல பெண்களுக்கு பிரசவம் சிசேரியன் தான் நடைபெறுகிறது. சுகப்பிரசவம் ஆன பெண்கள் விரைவிலேயே இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள் ஆனால் சிசேரியன் செய்த பெண்களுக்கு கொஞ்சம் கடினம் தான். சிசேரியனுக்கு பிறகு பெண்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும், அவர்களின் உடலில் ஆற்றல் குறைந்து காணப்படும் என்பதால் சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் சிசேரியன் செய்த பெண்கள் என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இட்லி:

Cesarean Delivery After Food in Tamil

 • Cesarean Delivery After Food in Tamil: அறுவை சிகிச்சை செய்த பெண்களுக்கு சிசேரியன் நடந்த 2 நாட்கள் கழித்து தான் உணவுகளை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து முதலில் இட்லி சாப்பிடுவதற்கு கொடுக்க வேண்டும் (இட்லி மாவு ஓரளவு தான் புளித்திருக்க வேண்டும்).

பாசிப்பருப்பு சாம்பார்:

After Cesarean Delivery Food in Tamil

 • After Cesarean Delivery Food in Tamil: பாசிப்பருப்பு சாம்பார் அல்லது பாசிப்பருப்பு சூப் செய்து கொடுக்கலாம். 1 மாதம் வரை அதிக காரம் உள்ள எந்த உணவுகளையும் சாப்பிட கூடாது. காரம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உணவில் மிளகு சேர்த்து கொடுக்கலாம்.

தயிர்:

சிசேரியன் செய்த பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் 

 • Cesarean Delivery Food in Tamil: தயிர் சாதம், மோர் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம் (தயிர் அல்லது மோர் அதிகம் புளித்திருக்க கூடாது) வயிற்று புண்ணை சரி செய்வதற்கு தயிர் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத பழங்கள்

பழங்கள்:

Indian Diet Chart After C-Section Delivery in Tamil

 • Indian Diet Chart After C-Section Delivery in Tamil: சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடலாம்.
 • அத்திப்பழம், கிஸ்மிஸ் பழம், பேரிச்சம் பழம் போன்ற பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் இழந்த இரத்தத்தை பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும்.
 • தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர் சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.

உளுந்தங்கஞ்சி:

After Cesarean Delivery Food in Tami

 • After Cesarean Delivery Food in Tamil: சிசேரியன் செய்த பெண்களுக்கு உடம்பில் வலி சற்று கூடுதலாகவே இருக்கும், அதனை சரி செய்வதற்கு தினமும் உளுந்தங்கஞ்சி குடிப்பது நல்லது. இது எலும்புகள் பலம் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

காய்கறிகள்:

After Cesarean Delivery Food in Tami

 • Cesarean Delivery Food in Tamil: கீரை, வெண்டைக்காய், அவரைக்காய் போன்ற மற்ற காய்கறிகளை சாப்பிடலாம்.
 • நார்ச்சத்து மிகுதியாக உள்ள காய்கறிகளை சிசேரியன் செய்த பெண்கள் சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.

சூப்:

Cesarean Delivery After Food in Tamil

 • Cesarean Delivery After Food in Tamil: அறுவை சிகிச்சை செய்த பெண்கள் 1 மாதத்திற்கு பிறகு எலும்பு சூப், ஆட்டுக்கால் சூப்-களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வரலாம்.
 • சாதத்தை குழைவாக வடித்து தான் சாப்பிட வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
 • குழந்தைக்கும் பால் கொடுக்க வேண்டும் என்பதால் சத்து மிகுந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.

சிசேரியன் செய்த பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்

சிசேரியன் செய்த பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்

 • வயிற்று புண் ஆறுவதற்கு சிறிது காலம் வரை மீன், கோழி, கருவாடு, பாகற்காய், கத்திரிக்காய், கொத்தவரங்காய் போன்றவற்றை தவிர்த்து கொள்ளுங்கள். இந்த உணவுகள் உடலில் அரிப்பை ஏற்படுத்தும் அதனால் உங்கள் புண் விரைவில் ஆறாது.
 • எண்ணெய் பதார்த்தங்கள், குளிர்ச்சியான பானங்கள், கிழங்கு வகைகள் போன்றவற்றை தவிர்த்து கொள்ளுங்கள்.
 • காரம் அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம். தையல் பிரிந்துவிடும் என்பதால் அதிக எடையுள்ள எந்த பொருளையும் தூக்க வேண்டாம், கனமான வேலைகள் எதுவும் செய்ய கூடாது.
பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil
Advertisement