Agathiyar Kulambu Uses in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அகத்தியர் குழம்பின் பயன்கள்/நன்மைகள் (Agathiyar Kulambu Benefits in Tamil) பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க. சித்த மருத்துவத்தில் அகத்தியர் குழம்பு என்பது ஒரு அறிய மருந்து ஆகும். நம்மில் பலருக்கும் இம்மருந்து பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இம்மருந்தில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. அதனை பற்றி ஒவ்வொன்றாக பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
இம்மருந்தினை சரியான அளவில் சரியான முறையில் உட்கொண்டால் பல்வேறு நோய்களையும் நீக்கவல்லது. நோயற்ற வாழ்வை விரும்புவோர் இம்மருந்தினை பயன்படுத்தலாம். உடலில் உள்ள என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு அகத்தியர் குழம்பு பயன்படுத்தலாம் என்பதை படித்து தெரிந்துகொள்வோம்.
அகத்தியர் குழம்பு நன்மைகள்:
அகத்தியர் குழம்பு பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. நோயற்ற வாழ்வை விரும்புவோருக்கு இது முக்கியமான மருந்து ஆகும். சீதா மருத்துவத்தில் குழம்பு என்றால் பல மூலிகை சாறுகளை, மருந்து பொருட்களை கூட்டி நெருப்பில் சுண்ட காய்ச்சி எடுத்து கொள்வது ஆகும். இவற்றின் பொதுவான பயன்பாடுகள் பின்வருமாறு:
- காய்ச்சல்
- இருமல்
- குளிர் காய்ச்சல்
- சுதகவாயு
- ரத்த மூலம்
- பாண்டு
- நீராம்பல்
- சோகை
- ஜன்னி
- குன்மம்
- கிரந்தி
- கல்லடைப்பு
- பிளவை
- தொடை வாழை
- அரையாப்பு
- சிலந்தி
- ஸ்தனவிப்புருதி
- புண்
- சன்னிவாதம்
- பறங்கிப் புண்
- கபால வலி
- கடி விஷம்
- பிரமை
- மலடு
இதுபோன்ற நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது அகத்தியர் குழம்பு.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி தொல்லை, குடல் கீரிப்பூச்சி போன்றவற்றிக்கு இம்மருந்தினை பயன்படுத்தலாம்.
மலக்கட்டுக்கு பிரச்சனைக்கு இம்மருந்தினை பயன்படுத்தலாம்.
மலத்தை முழுவதுமாக வெளியேற்றி உடலை சுத்திகரிக்க இந்த மருந்தினை பயன்படுத்தலாம். எனவே, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இம்மருந்தினை பயன்படுத்தினால் உடலில் உள்ள கழிவுகள் உடல் நீங்கி உடல் புத்துணர்ச்சி பெரும்.
செரிமான பிரச்சனை, இருமல் மூச்சுக்குழாய், மூச்சு திணறல், ஆஸ்துமா, காய்ச்சல், பைல்ஸ், இரத்த சோகை, தோல் நோய்கள், வலிப்பு கோளாறுகள், மார்பு வலி, வயிற்று புண்கள், இரத்த சோகை, கடுமையான காய்ச்சல், இருமல் குடற்புழு நிணநீர் அழற்சி, சீழீப்புண், புரையழற்சி, மார்பு நெரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீக்கும் தன்மை கொண்டது. மேலும், வீக்கம் மனநல கோளாறுகள், ஆஸ்கைட்ஸ் ஹைட்ரோசில் விதைப்பை அழற்சியால் ஏற்படும் காய்ச்சல் , மஞ்சள் காமாலை எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல் மற்றும் கண் கோளாறுகள், தீடீர் மயக்கம் போன்றவற்றிக்கு இம்மருந்தினை பயன்படுத்தலாம்.
குறிப்பு: இந்த மருந்தினை சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன் பிறகு பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு உடலுக்கும் தகுந்தவாறும் நோய்க்கு தகுந்தவரும் இம்மருந்தின் அளவு மாறுபாடும். ஆகையால், சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |