அமிலத்தன்மை குறைய அல்கலைன் உணவுகள் | Alkaline Foods List in Tamil
அதிகமாக எண்ணெயில் சேர்த்த உணவுகள், இறைச்சி, அதிக காரம் உள்ள உணவுகள், இனிப்பு மற்றும் பதப்படுத்தி வைக்கப்பட்ட உணவுகளை உண்பதால் சிலருக்கு வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனை அதிகமாகிவிடும். இது போன்ற பிரச்சனை இருப்பவர்கள் ஆல்கலைன் உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலானது நல்ல ஆரோக்கியமாக இருக்கும். புற்றுநோய் உள்ளவர்கள் இந்த ஆல்கலைன் உணவுகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆல்கலைன் என்பது நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் இனிப்பு, கார்ப்பு, கசப்பு என்று தனித்தனியாக வகைப்படுத்துகிறது.
ஆனால் அது கார உணவு மற்றும் அமிலம் நிறைந்த உணவு என்று இரண்டு வகையாகவும் இருக்கிறது. இது தனிச்சுவை அல்ல, இவை உணவின் தன்மையை மட்டுமே குறிக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் இவை இரண்டுமே சமநிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக அமிலத்தன்மை அதிக கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அமிலம் என்பதை ஆசிட் என்று அழைக்கிறோம். பலருக்கும் பிடித்த காரத்தன்மை கொண்டிருக்கும் உணவுகள் தான் ஆல்கலைன் என்று அழைக்கப்படுகிறது. வாங்க ஆல்கலைன் உணவுகளை (alkaline foods in tamil) படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் |
சிட்ரஸ் நிறைந்த பழங்கள்:
இந்த பழங்களில் அமிலத்தன்மை அதிகம் நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான அமிலம் கிடைக்கிறது. ஆனால் இவை உடலில் காரத்தன்மையை உண்டாக்கும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை ஏற்படுத்துவதில்லை. அசிடிட்டி என்னும் நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. மேலும் செரிமான பிரச்சனை, சிறுநீரகக் கற்கள், உயர் ரத்த அழுத்தம் பிரச்சனைகளை தடுத்து நிறுத்தும் ஆற்றல் உடையது.
வெள்ளரிக்காய்:
alkaline foods list in tamil: வெள்ளரிக்காய் மிகச்சிறந்த அமில தன்மையை நீக்கும் என்று சொல்லலாம். நம் உடலில் அதிகமான யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகளை வெள்ளரிக்காய் சாறு அதன் பாதிப்புகளை முற்றிலுமாக குறைத்துவிடும். வெள்ளரிக்காயில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகான், குளோரின் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
பாதாம் பருப்பு:
அல்கலைன் உணவுகள்: பாதாமானது பசியை அடக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்தும், தாதுச்சத்துகளும் இதில் இருக்கிறது. பாதாம் பருப்பில் நமது உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், ஒமேகா -3, ஒமேகா – 6 போன்றவை ரத்த கொழுப்பின் அளவை சீராக்கி இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் பி, துத்தநாகம், இரும்புச்சத்து, சுண்ணாம்பு, தாமிரம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. உணவில் தினமும் 4 பாதாம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். குறிப்பாக பாதாமில் அதிகமாக கலோரிகள் நிறைந்துள்ளதால் அதிக அளவு எடுத்துகொள்ள வேண்டாம்.
இயற்கை உணவு பட்டியல் |
முட்டைக்கோஸ்:
முட்டைக்கோஸில் அடங்கியுள்ள காரத்தன்மை புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ளும். அவற்றில் இருந்து விடுபடவும் வழிவகுக்கும். இதில் உள்ள நார்ச்சத்தினாலும், இது குறைந்த கொழுப்புத் தன்மை உள்ளது என்பதாலும் ஒவ்வோர் உணவுக் கட்டுப்பாட்டு முறையிலும் (டயட்) இது பயன்தரக்கூடியது. முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் மறதி நோய், நரம்புத் தளர்ச்சி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும். முட்டைக்கோஸில் வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.
இஞ்சி -பூண்டு- வெங்காயம்:
இஞ்சி பூண்டு வெங்காயம் இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இதை அதிகமாக சமையலில் பயன்படுத்தி வருகிறோம். இவை உணவில் சுவையை கூட்ட மட்டுமே பயன்படுத்துவதில்லை. உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் மேம்படுத்திகிறது. தினமும் பூண்டு சேர்த்த சூப், இஞ்சி கலந்த தேநீர், காய்கறி சாலட்களில் வெங்காயம் போன்றவை உடலுக்கு அதிக பலத்தை தரக்கூடும். இவை காரத்தன்மை கொண்டவை என்பதால் இவை உடலில் சேரும் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தி உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் கொண்டு சேர்க்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |