வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாதாம் எண்ணெய் மருத்துவ பயன்கள் 

Updated On: October 9, 2025 10:29 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

 

Almond Oil Benefits In Tamil |ஆல்மண்ட ஆயில் பயன்கள் 

இன்றைய பதிவில் பாதாம் எண்ணெய் பயன்கள்  பயன்கள் பற்றி பார்க்க போகிறோம். பாதாம் எண்ணெய்கு “ஆல்மண்ட ஆயில்” என மற்றோரு பெயரும் உண்டு. பழங்காலத்தில் இருந்தே பாதாம் எண்ணெய் பயன்படுத்தி வருகின்றனர். பாதாம் எண்ணெய் ஆனது முதன் முதலில் சீனா மற்றும் மத்திய ஆசியாவில் உருவாகி தற்போது  மத்திய தரைக்கடல் பகுதி வரை பரவியுள்ளது. பாதாம் எண்ணெயை ராணி கிளியோபாட்ரா தனது சரும பராமரிப்பிற்காக இந்த ஆல்மண்ட் ஆயிலை பயன்படுத்தியாக கூறப்படுகிறது.

மேலும், பாதாம் எண்ணெயில் புரதம், நார்ச்சத்து வைட்டமின் இ, ஆன்டி ஆக்சிடென்டுகள் கொழுப்பு மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல், உடல் எடையை அதிகரித்தல் மற்றும்  எலும்புகளை வலிமையாக்குதல் போன்ற  நன்மைகளை கொண்டுள்ளது.

ஆல்மண்ட ஆயில் தயாரிக்கும் முறை :

பாதாம் எண்ணெய் தயாரிக்க கசப்பு மற்றும் இனிப்பு பாதாம் என இரண்டும் எண்ணெய்க்காக பயன்படுத்துகின்றனர். பாதாமை சுத்தம் செய்து பின்னர் அவற்றின் இருக்கும் ஓடுகளை நீக்கி பாதாம் விதைகளை லேசாக சூடேற்றி பிறகு திருகு அளவி மூலம் அழுத்தி அதிலிருந்து பாதாம் எண்ணெய் தயாரிக்கும் முறையாகும். இதன் பிறகு பாதாம் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு நமக்கு வருகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு:

பாதாம் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.  பாதாம் எண்ணெய்யில் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகமாக இருப்பதால், இதனை தினமும் நம் உணவில் சேர்ப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசைரைடு குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் வராமல் பாதுகாக்க செய்கிறது.

புற்றுநோய் பாதிப்பு:

நம் தினமும் சாப்பிடும் உணவில் பாதாம் எண்ணெயை சேர்த்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதில் புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்ககூடிய ஆன்டி ப்ரோலிஃபெரேட்டிவ் பாதாம் எண்ணெயில் அதிகமாக இருப்பதால் மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. 

நினைவாற்றல் அதிகரிக்க:

பாதாம் எண்ணெய்யில் ஒமேகா 3 கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது நினைவாற்றல் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் மனஅழுத்தம் மற்றும் மனசோர்வு, பதற்றம் ஆகியவற்றை குறைத்து தூக்கத்தை தூண்டும் தன்மையை கொண்டுள்ளது.

நகங்களை பாதுகாக்க:

பாதாம் எண்ணெய் நம்முடைய நகத்தை வலுவாக வைத்திருக்கவும், நகத்தில் சொத்தை ஏற்படாமல் இருக்கவும், நகம் உடையாமல் பாதுகாக்க செய்கிறது. இதனை க்யூட்டிகல் ஆயிலாக இதனை பயன்படுத்தலாம். 

கருவளையங்கள் ஏற்படாமல்  இருக்க:

பாதாம் எண்ணெயை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் முகம் மற்றும் கண்ணை சுற்றி தடவி வந்தால் கண்ணில் இருக்கும் கருவளையம் மற்றும் கரும்புள்ளிகளை சரி செய்கிறது. பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ  பண்புகள் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் கண்கள் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது .

தேங்காய் எண்ணெய் நன்மைகள்

பாதாம் எண்ணெய்யை யார் பயன்படுத்த கூடாது?

பாதாம் எண்ணெயை ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் மற்றும் கடுமையான சரும பிரச்சனை இருப்பவர்கள் பாதாம் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now