தினமும் நீரில் ஊறவைத்த 7 பாதாம் சாப்பிடுங்க என்ன பயன் தெரியுமா..?

பாதாம்

ஊற வைத்த பாதாமில் (Badam) இவ்ளோ இருக்கா அட இவ்வளவு நாளா தெரியாமலே போயிடுச்சே..!

ஆமாங்க, பாதாமில் (Badam) அளவுக்கு அதிகமான சத்துக்கள் இருக்குனு எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதை ஊற வைத்து சாப்பிட்டால் அதிகமான பலன் இருக்குனு உங்களில் யாருக்காவது தெரியுமா ?.

இதை தெரிஞ்சிகிட்டிங்கனா, இவளோ நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோம்னு வருத்தப்படுவீங்க. அதனாலே இந்த பதிவு உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

காலை எழுந்தவுடன் இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்..!

பாதாம் (Badam) பயன்படுத்தும் முறை :

தினமும் நைட் நீங்க தூங்க போவதற்கு முன்னாடி 7 பாதாம் (Badam) எடுத்துக்கோங்க . ஒன்னுமில்லை அதை சாதாரண நாம குடிக்க யூஸ் பண்ற நீரிலே ஊற வைத்துவிட்டு தூங்கிடுங்க. மறுநாள் நாள் காலை எழுந்ததும் ஊறவைத்த 7 பாதாமை (Badam) எடுத்து அதனுடைய தோலை நீக்கி விட்டு தினமும் சாப்பிடுங்க.

எதற்காக தெரியுமா நாம் தோலை நீக்கி விட்டு சாப்பிட வேண்டும். நாம் தோலை நீக்காமல் சாப்பிடும் பொழுது ஊறவைத்த பாதமானது (Badam) சற்று செரிமானம் ஆக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும் . எனவே தான் தோலை நீக்கி பாதாமை (Badam) சாப்பிடும் பொழுது செரிமானக் கோளாறு இருந்தால் கூட அதை சரி செய்துவிடும்.

மேலும் பாதாமில் (Badam) உள்ள பயன்கள் குறித்து பார்ப்போம் :

1. பெண்களின் குழந்தை வாய்ப்பு அதிகரிக்க :

இதில் போலிக் ஆசிட் இருப்பதனால் குழந்தைப்பேறு தடையுள்ள பெண்களும் இந்த பாதாமை (Badam) 7 என்ற கணக்கில் தினமும் சப்பிடலாம். பிரசவ காலங்களிலும் கூட தொடர்ந்து சாப்பிடலாம். இதனால் பிரசவ காலங்களில் மட்டும் அல்லாமல் குழந்தைப் பேறுக்கு பின்பும் தாய்ப் பால் நன்கு ஊறவும் பயனுள்ளதாக இருக்கும்.

2. உடல் எடையை குறைக்க :

உங்கள் உடல் ரொம்ப பருமனாக இருக்கு தேவையற்ற கொழுப்பு அதிகமாக இருக்குனு வருத்தப்படுறீங்களா. அதற்கான தீர்வும் இது தாங்க. இது போல தினமும் ஊறவைத்த 7 பாதாமை (Badam) சாப்பிடும் பொழுது, நமது உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை மட்டும் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது உடல் வளர்ச்சிக்கும் ஹெல்த்திக்கும் எடையை குறைத்து கட்டுடல் மேனியை கொடுக்கின்றது .

3. முகம் பொலிவு மற்றும் முக சுருக்கம் நீங்க :

இப்படி பாதாமை(Badam) 7 என்ற கணக்கில் தினமும் சாப்பிடுவதனால் வசீகர முக அழகைப் பெற்று முக சுருக்கம் நீங்குகிறது. இதனால் உங்கள் உண்மை வயது கூறினால் கூட யாரும் நம்ப மாட்டாங்க.

4. தலை முடி வளர்ச்சி :

பாதாம் (Badam) இயற்கையாகவே முடி வளர்ச்சிக்கு ரொம்பவே உதவுது தான் சொல்லணும்ங்க, இந்த ஊறவைத்த 7 பாதாமை (Badam) நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்னெய் (அ) ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலை முடிக்கு பயன்படுத்தி வந்தால் அதிகமான முடி வளர்ச்சி அடைவதை கண்கூடாகவே நீங்கள் பார்க்கலாம் .

படிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..!

 

இந்த பயனுள்ள தகவலை நீங்களும் பயன்படுத்துங்க உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினற்கும் ஷேர் செய்து உதவுங்கள்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.