ஆப்பிள் பயன்கள் | Apple Fruit Benefits in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆப்பிளை விரும்பி சாப்பிடுவார்கள். ஆப்பிள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
தவறாமல் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவ செலவுகளே இருக்காது என்று அனைவரும் சொல்லி நாம் கேட்டிருப்போம். அனைவரும் சொல்லும் அளவிற்கு ஆப்பிளில் வைட்டமின் சத்துக்கள், ப்ரோட்டீன் மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது. ஆப்பிளானது முதன்முதலில் மத்திய ஆசியாவில் தான் பயிரிடப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அனைத்து குளிர் பகுதிகளிலும் ஆப்பிளானது பயிர் செய்யப்படுகிறது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன நோய்கள் சரியாகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் |
வாய் நுண்கிருமி நீங்க:
ஆப்பிளில் மாலிக் அமிலம் அதிகமாக நிறைந்துள்ளது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் குடல் பாதையில் இருக்கக்கூடிய நுண்கிருமிகள் அனைத்தும் நீங்கும். ஆப்பிளை நன்றாக மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டை பகுதியில் இருக்கக்கூடிய நுண்கிருமிகள் அனைத்தும் முற்றிலும் நீங்கிவிடும்.
கெட்ட கொலஸ்ட்ரால் நீங்க:
உடலில் தேவையில்லாமல் கெட்ட கொலஸ்ட்ரால் சேருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது வெளியில் விற்கக்கூடிய எண்ணெய் பதார்த்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் தான். ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் தினமும் ஆப்பிளை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்து உடலை கட்டுக்கோப்பாகவும் தேவையில்லாமல் கொலஸ்ட்ரால் சேராமல் இருப்பதற்கும் உதவியாக இருக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு:
கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க அதிகமாக நீர்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள பழ வகைகளில் ஆப்பிள் முதலிடத்தில் இருக்கிறது. ஆப்பிளில் நீர்ச்சத்து மட்டுமல்லாமல் அதிகமாக மாவுச்சத்தும் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் சரி சம உணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனைபடி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகளாக ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.
ஆப்ரிகாட் பழம் பயன்கள் |
உடல் வலிமை பெற:
உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், வலிமையாக இருந்தால் தான் நாம் எந்த ஒரு வேலையையும் முழுமையாக செய்ய முடியும். உடல் வலிமையாக இருக்க நாம் சத்து நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். ஆப்பிள் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான க்யூயர்சிடின் அதிகமாக உள்ளது. இதனால் உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களின் வலிமை அதிகரித்து, நுரையீரலுக்கு சீரான இரத்த ஓட்டத்தை வழங்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் தான் உடல் தேக ஆரோக்கியத்துடன் சிறப்பாக இருக்கும். ஆப்பிள் பழத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% வைட்டமின் ஆப்பிளில் அடங்கியுள்ளதால் தினமும் ஆப்பிள் பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |