ஆப்பிள் சீடர் வினிகர் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

 Apple Cider Vinegar Benefits in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆப்பிள் சீடர் வினிகர் நன்மைகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். ஆப்பிள் சீடர் வினிகர் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், அவற்றின் நன்மைகள் பற்றி நம்மில் பலர்க்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில்  Apple Cider Vinegar Benefits in Tamil பற்றி கொடுத்துள்ளோம்.

ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் ஆப்பிள் சீடர் வினிகர். இவற்றில் ஏராளமான மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகர் காய்ச்சல், அழற்சி மற்றும் நோய் தொற்றுக்களை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்து விளங்குகிறது. சரி இங்கு நாம் ஆப்பிள் சீடர் வினிகர் நன்மைகள் (Apple Cider Vinegar Benefits in Tamil) பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ஆப்பிள் சீடர் வினிகர் நன்மைகள்:

  • ஆப்பிள் சீடர் வினிகரில் பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. எனவே வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்ய பயன்படுகிறது.
  • வயிற்று போக்கு பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து அருந்துவதால் வயிற்று போக்கு பிரச்சனை சரியாகும்.
  • இரைப்பை வீக்கம், அலர்ஜி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை ஆப்பிள் சீடர் வினிகருக்கு உள்ளது. எனவே ஒரு ஸ்பூன் தேனில் 5 மில்லி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து, சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்துக்கு முன் அருந்த வேண்டும். இவ்வாறு அருந்துவதினால் மூக்கடைப்பு, சைனஸ், செரிமானம் போன்ற பிரச்சனை சரியாகும்.

ஆப்பிள் சீடர் வினிகர் தீமைகள்

  • காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஐந்து மில்லி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து, 10 நொடிகள் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஐந்து முறை செய்துவர, வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றங்களை போக்கி, சுவாச புத்துணர்ச்சியை தரும்.
  • ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஒரு வகையான கிருமி நாசினி தோல் மற்றும் நகங்களில் உள்ள கிருமிகளை அழிக்கக்கூடியது.
  • எனவே ஒரு பக்கெட்டில் வெது வெதுப்பான நீரை ஊற்றி அவற்றில் சிறிதளவு ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி 15 நிமிடங்கள் கால்களை ஊறவைக்க வேண்டும்.
  • பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கால்களைக் கழுவிவர கால் மற்றும் பாதத்தில் உள்ள பூஞ்சைகள் அழிந்துவிடும்.
  • சுத்தமான  தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து அதைச் சிறிய பஞ்சால் முகத்தில் ஆங்காங்கே ஒற்றி எடுத்து, 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கருமை, கரும்புள்ளிகள் ஆகியவற்றைச் சரிசெய்து, முகத்தைப் பளபளப்பாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement