ஆப்பிள் ஜூஸ் பயன்கள்
இன்றைய பதிவில் நாம் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்க இருக்கின்றோம். ஆப்பிள் ஜூஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்குடிக்கலாம். உடலில் எந்த விதமான பிரச்சனைகள் இருந்தாலும் சாப்பிட கூடிய ஒரு பழம் என்றால் அது ஆப்பிள் ஒன்றுதான். இதில் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும். ஆப்பிளை ஜூஸ் குடிப்பதன் மூலம் வைட்டமின், தாதுக்கள் ,ஆன்டி ஆக்சிடெண்ட் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும், ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் போது மிகவும் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆப்பிளை நீரில் கழுவி விட்டு தோலை நீக்கி விட்டு அதை ஜூஸ் செய்து குடிக்க வேண்டும். அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஆப்பிள் ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. இன்றைய பதிவில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க….
புற்றுநோய்க்கு தீர்வு:

ஆப்பிளில் அதிகமான வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து சருமத்தை பொலிவாக வைத்திருக்கும். தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் சருமத்தில் ஏற்படும் கருத்திட்டுகள், எக்ஸிமா போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. சரும புற்றுநோய் வராமல் தடுப்பதில் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் எடையை குறைக்க :
ஆப்பிளில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மெட்டபாலிசத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதில் இருக்கும் மினரல் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட்கள் உடலில் கெட்ட கொழுப்பை தேங்க விடாமல் செய்து உடல் எடையை குறைக்க செய்கிறது.
பப்பாளி ஜூஸ் தினமும் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இதய ஆரோக்கியம் :

ஆப்பிளில் நுண்ணூட்ட சத்துக்கள் இருப்பதால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆப்பிள் ஜூஸ் குடிப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து ரத்தத்தின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
செரிமானம் சீராக இருக்க:
தினமும் காலையில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதன் மூலம் உங்களின் குடல் இயக்கத்தை மேம்படுத்தி செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
கண் ஆரோக்கியம்:

ஆப்பிளில் வைட்டமின் ஏ சத்துக்கள் இருப்பதால், இது பார்வை திறனை அதிகப்படுத்துகிறது. ஆப்பிள் ஜூஸ் தினமும் குடிப்பதன் மூலம் கண்ணில் ஏற்படும் வறட்சியை தடுக்கிறது.
மாரடைப்பு:
இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதை தடுக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின்களும்,மினரல்களும் இரத்தம் உரைதல் மற்றும் இரத்த குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |














