அதிவிடயம் மருத்துவ பயன்கள்
இன்றைய பதிவில் மூலிகை செடிகள் பெயர்கள் மற்றும் அதன் பயன்களும் பற்றித்தான் தெரிந்துக் கொள்ளப்போகிறோம். மூலிகை செடிகள் (medicinal plants) தான் பல சித்த மருத்துவ துறைகளில் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். இயற்கையாக வளரும் மூலிகைகளில் நம் உடலிற்கு எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. ஒவ்வொரு மூலிகை செடிகளிலும் எண்ணற்ற அளவிற்கு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.நமக்கு எந்த மூலிகை செடி தேவைப்பட்டாலும் வெளியில் தேடுவதை வழக்கமாக இன்றும் வைத்துள்ளோம். அதனை தவிர்த்து அனைவரின் வீட்டிலும் நமது உடலை பாதுகாப்பாக வைத்திருக்க கூடிய மூலிகை செடிகளை வளர்த்து வரலாம். அதிவிடயம் ஒரு சிறந்த மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருளாகும். இந்த அதிவிடயம் வேர் இனிப்பு சுவையுடையது, நல்ல வாசனையாக இருக்கும், இந்த அதிவிடயம் வேர் நல்ல குளிர்ச்சி தன்மையுடையது.
இந்த அதிவிடயம், அனைத்து ஆயுர்வேதம் மற்றும் உலகில் உள்ள அனைத்து மருத்துவ முறைகளுக்கும் பயன்படுத்த கூடிய ஒரு சிறந்த மூலிகை செடி. இந்த அற்புத மருத்துவ குணங்கள் வாய்ந்த அதிமதுரம் (licorice பொடி) நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை எதிர்த்து போராடி அழிக்கும் சக்தியுடையது.சுரம், அதிசாரம், அஜீரண கோளாறுகள் போன்றவற்றிற்கு அதிவிடயத்தைப் பயன்படுத்தலாம். மேலும் தீராத இருமல், வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு அதிவிடய பொடியுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.அந்த வகையில் பல வகையான மூலிகை செடிகளின் பெயர்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றிதான் பார்க்க போகிறோம்.
அதிவிடயம் பயன்கள்:
செரிமான பிரச்சனை:

அதிவிடயம் வேர், சுக்கு, கோரை கிழங்கு மற்றும் சீந்தில் கொடி ஆகியவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து அரை லிட்டர் தண்ணீரில் நன்கு காட்சி குடித்து வந்தால் செரிமான பிரச்சனை முற்றிலும் நீங்கிவிடும்.
சளி மற்றும் காய்ச்சல் :
சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் வாந்தி, ஜுரம் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. அதிவிடயம் பொடியை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் முற்றிலும் குணமாகிவிடும். குழந்தைகளுக்கு இருமல் பிரச்சனை இருந்தால் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் அதிவிடயப்பொடியுடன், ஓரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
மாதவிடாய் வலி :

அதிவிடயம் மூலிகை அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடையதாக இருக்கிறது. மேலும் ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் கொண்டவை. இவை மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புக்கும், வலியிலிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது.
மூலிகை செடி வகைகள் | Mooligai Payangal in Tamil
மூலத்தை சரிசெய்ய :
அதிவிடய சூரணத்தை கொஞ்சம் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு, பேதி மற்றும் வயிற்று போக்கு, எரிச்சல் மற்றும் மூல நோயை சரி செய்கிறது.
எரிச்சல் நீங்க:
![]()
அதிவிடயம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும், கண் ஒளி பெறும். இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகளை குணமாக்குகிறது.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |














