அவுரி இலை பயன்கள் | Avuri Ilai Podi Uses in Tamil
Avuri Ilai Podi Uses in Tamil:- அவுரி செடி முழுவதும் அதிக மூலிகை தன்மை வாய்ந்தது, இதன் காரணமாகவே ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவங்களில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த அவுரி இலை கட்டி, வீக்கம் போன்றவற்றை கரைக்கும் தன்மை கொண்டது. அதேபோல் விஷத்தை முறிக்கும் வல்லமை வாய்ந்தது. உடல் வலிமை பெரும், வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும், தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். இது போன்று ஏராளமான நற்பயன்கள் அடங்கியது இந்த அவுரி இலை. சரி இந்த பதிவில் அவுரி இலை பயன்கள், அவுரி இலை பொடி பயன்கள், அவுரி இலை ஹேர் டை செய்வது எப்படி, அவுரி இலை பார்ப்பதற்கு எப்படி இருக்கும் போன்ற விவரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
அவுரி இலை பயன்கள் – Avuri Leaf Benefits in Tamil:-
தோல் நோய் குணமாக:-
தோல் நோய் மற்றும் ஒவ்வாமை காரணமாக தேகம் அழகின்றி காணப்படும். அதேபோல் இந்த பிரச்சனை இருக்கும்போது வெளியே செல்ல பொதுவாக அனைவரும் தயங்குவோம். அதாவது மற்றவர்கள் நம்மை பார்த்து ஏதாவது கேலியும் கிண்டலும் செய்வார்களோ என்று வெளியே செல்ல தயங்குவோம். அப்படிபட்டவர்களுக்கு இந்த அவுரி இலை பயன்படுகிறது. அதாவது ஒரு கையளவு அவுரி இலையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின் இதனுடன் சிறிதளவு மிளகு மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். அதாவது ஒரு டம்ளர் அளவு வரும் அளவுக்கு காய்ச்ச வேண்டும். பின் வடிகட்டி அதை அருந்திவர தோல் நோய் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். இந்த முறையை தொடர்ந்து ஏழு நாட்கள் பின்பற்ற வேண்டும்.
மஞ்சள் காமாலை குணமாக:-
மஞ்சள் காமாலை நோய் குணமாக அவுரி இலைகளை நன்றாக சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு கொட்டைப் பாக்கு அளவு அரைத்த அவுரி இலை, ஒரு டம்ளர் காய்ச்சிய வெள்ளாட்டுப்பாலில் கலக்கி, வடிகட்டி அதிகாலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்துவர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
பாம்புக்கடிக்கு முதலுதவி:-
யாரையாவது பாம்புக்கடித்துவிட்டால் உடனே பதற்றம் அடையாமல், பக்கத்தில் அவுரி செடி இருந்தால் அவற்றில் பசுமையான இலைகளை பறித்து ஒரு கொட்டை பாக்கு அளவு அரைத்து சாப்பிட கொடுங்கள். பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
வெள்ளைப்படுதல் குணமாக:
பல பெண்கள் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு அவுரி இலை மிக சிறந்த மருந்தாகும். அவுரி இலை, யானை நெருஞ்சில் இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள். பின் அரைத்த கலவையை எலுமிச்ச பழ அளவு எடுத்து மோரில் கலந்து காலையில் தொடர்ந்து 10 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வர வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.
மாதவிடாய் பிரச்சனை குணமாக – கருப்பை பிரச்சனை குணமாக – அவுரி இலை பொடி:-
அவுரி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி, கொட்டைக்கரந்தை, குப்பைமேனி, செருப்படை ஆகிய மூலிகை செடிகளை சம அளவு எடுத்து சுத்தம் செய்துகொள்ளுங்கள். பின் நிழலில் நன்றாக உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.
இந்த பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து காலை மாலை என இரு வேளை 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனை, மாதவிடாய் கோளாறு, கருப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். அதேபோல் வயிற்றில் உள்ள பூச்சிகள் அளிக்கப்படும்.
அவுரி இலை செடி:-
அவுரி இலை ஹேர் டை:-
இயற்கையான முறையில் தங்களது தலைமுடியை கருமையாக்க அவுரி இலை ஹேர் டை தயார் செய்யும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை.
தேவையான பொருட்கள்:-
- மருதாணி பவுடர் – 1 கப்
- அவுரி இலை பவுடர் – 1 கப்
அவுரி இலை ஹேர் டை செய்முறை & பயன்படுத்தும் முறை:-
முதல் நாள் இரவே மருதாணி பவுடரை தண்ணீரில் கரைத்து பேஸ்டாக கலக்கி வைக்கவும். பின் மறுநாள், எண்ணெய் இல்லாத முடியில் மருதாணி பேஸ்டை தலையில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள்.
பின் முடியை நன்கு உலர்த்திய பிறகு, அவுரி இலை பொடியை தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளுங்கள், இதனை உடனே தலை முடியில் அப்ளை செய்து, மீண்டும் ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர், முடியை வெறும் தண்ணீரில் அலச வேண்டும். இந்த முறையில் தங்கள் முடிக்கோ மண்டைக்கோ எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. 100 சதவீதம் இயற்கையானது. ஒரு மாதம் வரை முடி கருப்பாக இருக்கும். பிறகு மீண்டும் வெள்ளையானால் மீண்டும் இதேபோல செய்து தலை முடியில் அப்ளை செய்து கொள்ளலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியம் |