Kodaikalathil Seiya Koodatha Thavarugal
கோடை காலம் வந்து விட்டாலே வெயில் வாட்டி எடுக்கும். கோடை காலத்தில் நம் உடலை பாதுகாப்பதே பெரிய போராட்டமாக இருக்கும். சுட்டெரிக்கும் வெயிலினால் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகும். அதனால் உடலினை குளிர்ச்சியாக வைத்து கொள்வது, வீட்டை குளிர வைப்பது என நிறைய முறைகளை மேற்கொள்வோம். அதில் நாம் நல்லது என நினைத்து நிறைய தவறுகளை செய்வோம். அது என்னென்ன என்பதனை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
வெயில் காலத்தில் செய்ய கூடாத தவறுகள் :
கோடை காலத்தில் வெளியில் சென்று வீட்டுக்கு வந்ததும் வியர்க்கிறது என குளிப்பீர்கள். ஆனால் அப்படி செய்தால் ஜலதோஷம் தான் பிடிக்கும். அதனால் பேனை போட்டு வியர்வை போன பிறகு குளிப்பது நல்லது.
வெயில் காலத்தில் எல்லோருடைய ப்ரிஜ்ஜிலும் காய்கறிகள் இருக்கிறதோ இல்லையோ ஐஸ் வாட்டர் இருக்கும். வெயிலில் போய் விட்டு ஐஸ் வாட்டர் குடித்தால் தான் திருப்தி என சிலர் குடிப்பார்கள். உண்மையில் இது உடலுக்கு ஆரோக்கியம் இல்ல. ஐஸ் வாட்டர் குடித்தால் உடலில் சூட்டை கிளப்பி விட்டுடும். இதனால் வயிற்று வலி, நீர் கடுப்பு ஆகிய தொந்தரவுகள் வரும்.
கோடை காலத்தில் அதிகமாக வெளியில் செல்லாதீர்கள். இதனால் மயக்கம் மற்றும் உடல் சூட்டினால் வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம்.
ஜூஸ் வகைகள் :
வெயில் காலத்தில் ஜூஸ் குடிப்பதால் நன்மை என நினைத்து கடைகளில் விற்கப்படும் பாட்டில் ஜூஸ்களை வாங்கி குடிப்பீர்கள். இதனால் உடலுக்கு பல்வேறு தீமைகள் வருகின்றன. வெயில் காலத்தில் ஜூஸ் குடிப்பது நன்மை தான் ஆனால் மோர், கம்பங்கூழ் போன்றவை வீட்டிலே போட்டு குடிக்கலாம். பழங்களை வைத்து வீட்டிலே ஃபிரஸ் ஜூஸ் போட்டு குடிக்கலாம். அதிக தண்ணீர் சத்து உள்ள பழங்களை சாப்பிடலாம்.
சரியான அளவு தண்ணீர் பருக வேண்டும் :
வெயில் காலத்தில் தாகம் எடுக்கும் வரை காத்திருக்காதீர்கள். தானாகவே தண்ணீர் நிறைய குடிக்க பழகி கொள்ளுங்கள். அப்படி குடிக்கவில்லையென்றால் உடலில் தண்ணீர் சத்து குறைந்து தோல் சுருக்கம், உதடு வெடித்தல், நாக்கு,தொண்டை வறண்டு போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
முதியவர்கள் கவனிப்பு :
வெயில் காலத்தில் முதியவர்களை தனியாக வெளியில் அனுப்ப கூடாது. வெயிலின் தாக்கத்தால் அவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புள்ளது. இது கை கால் இழுத்து கொள்ளும் வாதம் ஆகும்.
உணவில் மாற்றம் :
வெயில் காலத்தில் மாமிச உணவுகளை தவிர்ப்பது நல்லது. பிராய்லர் கோழி சாப்பிடுவதை முக்கியமாக தவிருங்கள். இதனால் உடல் சூடு மற்றும் அம்மை நோய் வர வாய்ப்புகள் உள்ளது.
கோடை காலத்தில் அதிகமாக வெளியில் செல்லாதீர்கள். இதனால் மயக்கம் மற்றும் உடல் சூட்டினால் வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம்.
கோடை காலத்தில்தான் மாங்காய் சீசன் வருகின்றன. அதனால் வெயில் காலத்தில் மாம்பழம், பலாப்பழம் போன்ற சூடு நிறைந்த பழங்களை சாப்பிடாமல் நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிடுங்கள்.
கோடை காலத்தில் வீட்டை குளுமையாக வைத்து கொள்வது எப்படி.?
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |