பாதாம் பிசின் மருத்துவ பயன்கள் | Badam Pisin Benefits in Tamil

Badam Pisin Health Benefits

பாதாம் பிசின் நன்மைகள் – Badam Pisin Health Benefits

Badam Pisin Benefits in Tamil:- பொதுவாக ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகளில் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு பலவகையான மூலிகைகளை பயன்படுத்தியும், மரங்களில் வடியும் பிசின் போன்றவற்றையும் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் பாதாம் மரத்தில் இருந்து கிடைக்கும் பாதாம் பிசின் உடலில் ஏற்படும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்த ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவங்களில் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றது. இந்த பாதம் பிசின் என்பது வேற எதுவும் இல்லை குளிர்பானம் கடைகளில் விற்கப்படும் சர்பத், ஜிகர்தண்டா போன்ற குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் வெள்ளை நிற ஜெல்லி போன்று இருப்பது பாதாம் பிசின் தான். சரி இந்த பதிவில் பாதாம் பிசின் மருத்துவ பயன்கள் மற்றும் பாதாம் பிசின் சாப்பிடும் முறை பற்றி தெரிந்துகொள்வோமா?

பாதாம் பிசினில் உள்ள ஊட்டச்சத்துக்கள்?

இந்த பாதாம் பிசினில் கார்போஹைட்ரேட்டு, கொழுப்பு, புரதங்கள், சோடியம், பொட்டாசியம், மெக்னீஷியம், கால்சியம், இரும்பு மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

உடல் எடை குறைய சியா விதை எப்படி சாப்பிட வேண்டும்?

பாதாம் பிசின் பயன்கள் – Almond Gum Benefits in Tamil

உடல் உஷ்ணம் நீங்க:-

உடல் உஷ்ணம் நீங்க

பொதுவாக சிலருக்கு அனைத்துவகை காலங்களிலும் உடல் சூடாகவே இருக்கும். இதன் காரணமாக வயிற்று வலி, நீர்க்கடுப்பு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று சம்மந்தமான அனைத்து வகை பிரச்சனைகளும் ஏற்பட கூடும். ஆகவே இந்த பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய பாதாம் பிசின் பயன்படுகிறது. உடல் உஷ்ணம் ஏற்படும் போது தண்ணீரில் சிறிதளவு பாதாம் பிசின் சேர்த்து ஊறவையுங்கள். அந்த பாதாம் பிசின் ஜெல்லி போன்று நன்றாக ஊறி வந்த பிறகு அதனை வெறும் வாயில் சாப்பிடலாம். இல்லையெனில் மோர், சர்பத் போன்றவற்றில் ஏதாவது தயார் செய்து அவற்றில் அந்த ஊறவைத்த பாதம் பிசினை கலந்து சாப்பிடலாம். இதன் மூலம் உடல் உஷ்ணம் தணியும்.

பனங்கற்கண்டு நன்மைகள்

உடல் எடை அதிகரிக்க & உடல் எடை குறைக்க:

உடல் எடை அதிகரிக்க

பொதுவாக உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் சிறந்த பலனை அளிக்கக்கூடிய ஆற்றல் பாதாம் பிசினுக்கு இருக்கின்றது. இருப்பினும் இந்த இரண்டு பிரிவினரும் சாப்பிடும் முறைதான் வேறுபாடும். அதாவது…

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு முறை கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து அருந்தி வர உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு முறை கொழுப்பு நீக்கிய  பாலில் பாதாம் பிசினை கலந்து அருந்தி வர உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

நீர் கடுப்பு குணமாக:

நீர் கடுப்பு குணமாக

நீர் கடுப்பும் உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று. அதேபோல் ஆண் பெண் என அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனை என்றும் சொல்லலாம். பாதாம் பிசின் இந்த சிறுநீர்கடுப்பு பிரச்சனைக்கு சிறந்த தீர்வினை அளிக்கின்றது. எனவே பாதாம் பிசினை நீரில் நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு ஒரு கிளாஸ் மோரில் ஒரு ஸ்பூன் பாதாம் பிசின் சேர்த்து காலை, மதியம் என்று இரு வேளை அருந்தி வர சிறுநீர்கடுப்பு குணமாகும்.

சப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

வெள்ளைப்படுதல் குணமாக:-

வெள்ளைப்படுதல் குணமாக

உடல் உஷ்ணத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இந்த பிரச்சனை குணமாக ஊறவைத்த பாதாம்பிசின் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அப்படியே சாப்பிட வேண்டும். காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் மூன்று நாள் தொடந்து சாப்பிட்டு வந்தால் இந்த வெள்ளைப்படுதல் குணமாகும்.

ஆண்மை குறைவு:-

ஆண்மை குறைவு

ஆண்கள் பொதுவாக மலட்டுத்தன்மையை சந்திக்க மிக முக்கிய காரணம் விந்தணுக்கள் குறைபாடு என்று சொல்லலாம். உடல் உஷ்ணத்தினால் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. அதேபோல் இறுக்கமான ஆடை, நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையில் பணி செய்வது போன்றவை விந்தணுக்களின் ஆரோக்கியத்தை குறைத்து விடுகிறது. விந்தணுக்கள் நீர்த்துபோகவும் இவை காரணமாகிறது. ஆகவே ஆண்கள் தினமும் இரவு இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து அருந்தி வந்தால் உடலின் உஷ்ணம் தணிந்து, நரம்புகள் வலுப்பெற்று விந்து கெட்டிப்படும். மலட்டுத்தன்மை இருந்தாலும் அது நீங்கும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியம்