Badam Pisin Side Effects in Tamil | பாதாம் பிசின் தீமைகள்
பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது உங்களுக்கு பாதாம் பிசின் என்றால் மிகவும் பிடிக்குமா..? இன்றைய சூழலில் பலரும் பாதாம் பிசினை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் பாதாம் பிசினில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. அதுபோல அதில் இருக்கும் நன்மைகள் போலவே அதில் தீமைகளும் இருக்கின்றன. அதனால் இப்பதிவின் வாயிலாக பாதாம் பிசின் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பாதாம் பிசினை அளவோடு உட்கொண்டால் எந்த வித பிரச்னையும் ஏற்படாது. அதுவே, அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே, இப்பதிவில் பாதாம் பிசின் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம்.
பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பாதாம் பிசின் தீமைகள் – Badam Pisin Side Effects in Tamil
பாதாம் பிசின் என்றழைக்கப்படும் பசையானது பாதாம் மரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான உணவு பொருளாகும். இந்த பாதாம் பிசினானது பல நூற்றாண்டுகளாக வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பாதாம் பிசினானது காய்ச்சல், சளி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அன்றைய காலகட்டத்தில் இரவு உணவுக்குப் பிறகு படுக்கைக்குச் செல்வதற்கு முன் இந்த பாதாம் பிசினை தான் சாப்பிடுவார்கள். மேலும் பாதாம் பிசினில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
பாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..
சரி இப்போது பாதாம் பிசின் தீமைகள் பற்றி பார்க்கலாம் வாங்க. பாதாம் பிசின் நன்மைகள் பற்றி மேல் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்த்திருப்பீர்கள். என்ன தான் பாதாம் பிசினில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், நாம் அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அந்த பாதிப்புகள் என்ன என்று பார்க்கலாம் வாங்க.
வயிற்று கோளாறுகள்:
பொதுவாக பாதாம் பிசினை நாம் அளவுக்கு அதிகமாக சேர்த்து கொள்ளும் போது அது வயிற்று கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இப்படி நாம் குளிர்பானங்களில் அதிகளவு பாதாம் பிசினை சேர்த்து குடிப்பதால், வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற பாதிப்புகளை தருகிறது.
நச்சுக்கள் அதிகரிக்கிறது:
பாதாம் பிசினில் இருக்கும் பண்புகளானது நம் உடலில் நச்சுக்களை அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக பாதாம் பிசினில் இருக்கும் அதிகப்படியான நுகர்வு மூச்சுத் திணறல், நரம்பு கோளாறுகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பாதாம் பிசின் யார் சாப்பிட கூடாது:
பொதுவாக பாதாம் பிசினை பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாது என்று சொல்லப்படுகிறது. மேலும் பாதாம் பிசினை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், பாதாம் பிசினை சிறிய அளவில் உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |