வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மூங்கில் அரிசியின் நன்மை, தீமை மற்றும் யாரெல்லாம் சாப்பிட கூடாது..

Updated On: September 7, 2026 1:10 PM
Follow Us:
மூங்கில் அரிசி பயன்கள்
---Advertisement---
Advertisement

Moongil Arisi Benefits in Tamil

மூங்கில் அரிசி பயன்கள் / moongil arisi benefits: மூங்கில் அரிசி நெல் போலவே இருக்கும், பழங்குடி மக்களின் முக்கிய உணவு. இந்த மூங்கில் அரிசி உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்கும். மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளாகும். தினமும் மூங்கில் அரிசி உட்கொள்வதினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் நிகழ்கின்றது.

மூங்கில் அரிசியில் உள்ள சத்துக்கள்:-

இந்த மூங்கில் அரிசில் ஏராளமான கலோரிகள் உள்ளது. ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இங்கு மூங்கில் அரிசியின் பயன்கள் (bamboo rice benefits in tamil) பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…

கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் 12 நன்மைகள்..!

சர்க்கரை நோய் குறைய:

சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகி போனவர்களை, மாறும்படியும் சீரான உடல் அமைப்பை பெற செய்யும் இந்த மூங்கில் அரிசி. மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிரிசி ஆகியவரை 100 கிராம் எடுத்து அரைத்து மாவுபோல் செத்து கொள்ளவும். இந்த மாவில் இருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து கஞ்சிபோல் செய்து தினமும் குடித்து வர. உடல் வலிமையடையும், சக்கரையை நோயை கட்டுப்படுத்தும்.

எலும்பு ஆரோக்கியம்:

 moongil arisi benefits in tamil

இந்த மூங்கில் அரிசியில் தினமும் கஞ்சி வைத்து சாப்பிட்டு வர மூட்டு வலி, முட்டியில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.

உடல் எடை குறைய:

உடல் எடை குறைய, தொப்பை குறைய மூங்கில் அரிசியை வாரத்தில் இரண்டு முறை பொங்கலாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிது. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூங்கில் அரிசியை தினமும் காலையில் கஞ்சியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இந்த குழந்தையினமை பிரச்சனை சரியாகும்.

இந்த மூங்கில் அரிசியில் செய்த கஞ்சியை சாப்பிடுவதால் பசியை குறைக்கும், உடலில் ஆற்றலை பெருக்கும்.  இந்த மூங்கில் அரிசியானது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை உடையது. அதனால் கர்ப்ப கால பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிடலாம்.

கொலஸ்ட்ராலை குறைக்க:

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் சக்தி மூங்கில் அரிசிக்கு உள்ளது. இந்த மூங்கில் அரிசியினை சாப்பிட்டு வந்தால் கழுத்து வலி, இடுப்பு வலி, போன்றவை சரியாகும். அதுமட்டும் இல்லாமல் உடல் வலிமை அடையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும், நரம்புத் தளர்ச்சியை சரி செய்யும்.

தொண்டை எரிச்சல் நீங்க:

மூங்கில் அரிசியில் உள்ள பாஸ்பரஸ் சத்தானது எரிச்சலூட்டும் இருமல் மற்றும் தொண்டை புண் பிரச்சனையை சரி செய்யக்கூடியது. அதுமட்டுமில்லாமல் இருமல் மற்றும் ஆஸ்துமா பிரச்சனையையும் சரி செய்ய கூடியது.

இந்த அரிசியில் வைட்டமின் B6 அதிகம் நிறைந்துள்ளது. இந்த சத்து ஆனது பற்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கும், பல் சொத்தை பிரச்சனையை சரி செய்வதற்கும் உதவுகிறது.

செரிமான பிரச்சனை:

 மூங்கில் அரிசி பயன்கள்

மூங்கில் அரிசியில் நார்சத்து நிறைந்துள்ளது. அதனால் இதனை சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனையை சரி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் மலம் ஈசியாக வெளியேறுவதற்கும் உதவியாக இருக்கிறது. இரைப்பைக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறது.

மூங்கில் அரிசி தீமைகள்:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மூங்கில் அரிசியை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை நீங்கள் எடுப்பதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை கேட்டு எடுத்து கொள்வது நல்லது.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மூங்கில் அரிசியை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அவர்கள்  மூங்கில் அரிசியை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மொன்ங்கில் அரிசியை சாப்பிடுவதால் நன்மைகள் கிடைக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. அளவோடு எடுத்து கொள்வது சிறந்தது.

மூங்கில் அரிசியில் கஞ்சி செய்முறை விளக்கம்:-

தேவையான பொருட்கள்:-

  1. மூங்கில் அரிசி – 1 கப்
  2. பாசிப் பருப்பு – ¼ கப்
  3. பிரியாணி இலை – 4
  4. பூண்டு – 5 பல்
  5. பச்சை மிளகாய் – காரத்திற்கு ஏற்ப
  6. கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
  7. புதினா – சிறிது
  8. கொத்தமல்லி – சிறிது
  9. சிறிய வெங்காயம் – 10
  10. உப்பு – தேவைக்கு
  11. முந்திரிப் பருப்பு – சிறிது
  12. ஏலக்காய் – 2
  13. தேங்காய் பால் – 1 கப்

மூங்கில் அரிசி(moongil arisi) கஞ்சி செய்முறை:-

மூங்கில் அரிசியையும், பாசிப் பருப்பையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.

பின் குக்கர் அல்லது மண் பாத்திரத்தில் தேங்காய் பால் தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, நீரில் ஊற வைத்த அரிசி, பருப்பையும் போட்டு, தேவையான அளவு நீருடன், கஞ்சியாகக் காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் இருந்து இறக்கியபின், தேங்காய் பாலைச் சேர்த்து குடிக்கலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now