மூங்கில் உப்பின் நன்மைகள்…!

Bamboo Salt

மூங்கில் உப்பு பற்றி தெரியுமா ?

ஹலோ நண்பர்களே. இன்று நம் ஆரோக்கியம் பதிவில் எல்லோருக்கும் பயனுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இன்று நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் தான் இந்த மூங்கில் உப்பு.

இந்த மூங்கில் உப்பின் மூலம் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது இதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க நண்பர்களே இதனால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்ப்போம்.

Salt In Tamil: 

Salt

நம் அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் உணவு பொருட்களில் எல்லோரும் முக்கியமாக சேர்க்கும் ஒரு பொருள் தான் உப்பு. மேலும் உணவுக்கு சுவைகூட்டும் தன்மையை கொண்டுள்ளது. நம் சமையலறையில் இருக்கும் பொருட்களில் மிகவும் இன்றியமையாத பொருள் என்றால் அது உப்பு தான். இருந்தாலும் இந்த உப்பை எதிலுமே  அளவோடு தான் பயன்படுத்துவார்கள். உணவு பொருட்களில் உப்பு இல்லையென்றால், பெரும்பாலும் உணவுகளில் சுவையே இல்லாமல் போய்விடும். இதற்கு தான் நம் முன்னோர்கள் ” உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று கூறி இருக்கிறார்கள். உப்பு பதப்படுத்துதல் முறையிலும் பயன்படுகிறது. உப்பு இருக்கும் இடத்தில் கிருமிகள் நெருங்காது என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பு குறைய இதை சாப்பிடுங்கள்

 

மூங்கில் உப்பு என்றால் என்ன:

bamboo salt

மூங்கில் உப்பு என்பது நேரடி முறையில் கிடைக்காது. இது ஒரு செயற்கை முறையில் தயாரிக்கும் உப்பு என்று கூறுகிறார்கள். இந்த உப்பை கொரியா நாட்டில் செயற்கையாக தயாரித்தாலும் இந்த உப்பிற்கு அங்கு தான் மதிப்பு அதிகம். அதுமட்டுமில்லாமல் கொரிய நாட்டில் தான் அதிகாவு தயாரிக்கப்படுகிறது. இந்த உப்பை அதிகம் பயன்படுத்துவது அந்நாட்டு மக்கள் தான் அதிகம்.

கடலில் இருந்து கிடைக்கக்கூடிய உப்பை மூங்கில் மரக்கட்டையில் வைத்து அதை நன்கு வேகவைத்து தயாரிக்கிறார்கள். இதை உப்பு என்று சொல்வதை காட்டிலும் ஒரு சிறந்த சத்தான உணவு பொருள் என்று கூறலாம். காரணம், உப்பை வேகவைப்பதால் இதில் உள்ள தேவையில்லாத கழிவுகள் வெளியேறி நமது உடலுக்கு தேவையான கால்சியம், பொட்டாசியம், அயன் இதுபோன்ற சத்துக்கள் இந்த உப்பில் கிடைக்கின்றன. அதனால் தான் உப்பை சத்தான உணவு பொருள் என்று அந்நாட்டு மக்கள் கூறுகிறார்கள்.

மூங்கில் உப்பு தயாரிக்கும் முறை:

சமமான அளவுகளில் வெட்டி எடுக்கப்பட்ட மூங்கில் கட்டைகளினுள் இந்த சாதாரண வெள்ளை உப்பை வைத்து மூங்கிலின் மேற்பகுதியில் களிமண்ணை கொண்டு அடைத்துவிடுகிறார்கள். களிமண் என்பது அந்த நாட்டில் கிடைக்க கூடியது. பின்னர், இந்த மூங்கில் கட்டைகளை எடுத்து சென்று எரியூட்டியில் வைக்கிறார்கள். நெருப்பில் தான் இந்த உப்பை வேக வைக்கிறார்கள். அப்படி வேக வைக்கும் போது அந்த மூங்கிலில் இருந்து ஒரு எண்ணெய் வெளிவந்து அந்த உப்பினுள் சேர்ந்துவிடுகிறது.

யாருக்கும் தெரியாத வேப்பிலையின் நன்மைகள் உங்களுக்கு தெரிய வேண்டுமா

 

அதன் காரணமாக அந்த உப்பிற்கு ஒரு இனிப்பு சுவை சேர்க்கிறது. இந்த இனிப்பு சுவையின் காரணமாக தான் கொரியா நாட்டில் உப்பை அதிகம் விரும்புகிறார்கள். இந்த உப்பை 9 முறை வேகவைத்தால் தான் அந்த இனிப்பு சுவையை கொடுக்கும் என்று கூறுகிறார்கள். அதன் பிறகு உப்பை மூக்கிலிலிருந்து வெளியே எடுத்து நன்கு அரைத்து பொடியாக எடுத்து கொண்டு, மீண்டும் அதே போல் மூங்கில் அடைத்து எரியூட்ட வேண்டும்.

இப்படி தயாரிக்கக்கூடிய உப்பை கொரியா நாட்டில் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுத்துகிறார்கள். காரணம் இந்த உப்பை மூங்கிலில் சேர்த்து அதன் மீது களிமண்ணால் அடைக்கும் போது இந்த இரண்டு பொருட்களில் உள்ள சத்துகள் உப்புடன் சேர்ந்து அதிகம் சத்துக்கள் தருகிறது.

Bamboo Salt Benefits in Tamil:

  • அஜீரண கோளாறுகளை தடுக்கிறது.
  • கொரியா நாட்டின் கிருமிநாசினியாக இந்த உப்பை பயன்படுத்துகிறார்கள்.
  • கண் சம்மந்தபட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • வயிற்றுப்போக்கை தடுக்கும் பொருளை பயன்படுகிறது.
  • உடலில் ஏற்பட்ட வீக்கம், வெளிக்காயம் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
  • உயிர் கொல்லி நோய்களான புற்றுநோய் மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படும் என்று ஆய்வில் கூறுகிறார்கள்.
  • உடலில் ஏற்படும் சோர்வுத்தன்மையை குறைகிறது.
  • சருமத்தில் உண்டாகும் வெடிப்புகளை சரிசெய்து சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
  • சைனஸ் போன்ற சுவாச கோளாறுகளை தடுக்கிறது.
  • தசை பிடிப்பு மற்றும் தசைகளில் ஏற்படும் வலி போன்றவற்றை தடுக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>உடல் ஆரோக்கிய குறிப்புகள்