மாட்டு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | Beef Benefits in Tamil

Beef Benefits in Tamil

மாட்டிறைச்சி நன்மைகள் | Benefits of Beef in Tamil

இன்றைய உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இருக்கமாட்டார்கள். அசைவ உணவு என்று சொன்னாலே எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊரும். அசைவ உணவுகளை அனைவரும் விரும்பிச் சாப்பிட்டாலும் கூட மாட்டு இறைச்சி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. மாட்டுக் கறியை சாப்பிடுவது உடலுக்கு கெடுதல் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுதான் தவறு. மாட்டிறைச்சியில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. வாங்க மாட்டு இறைச்சியின் பயன்கள் (beef benefits in tamil) பற்றி கீழே விரிவாக படித்தறிவோம்..

நெத்திலி மீன் பயன்கள்

அடங்கியுள்ள சத்துக்கள்:

சிவப்பு இறைச்சியான மாட்டிறைச்சியில் வைட்டமின், இரும்பு, மினரல், சிங், புரதம், கொழுப்பு போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாட்டிறைச்சியில் அதிக கலோரிகள் நிறைந்துள்ளது.

இரத்த சோகை குணமாக:

மாட்டு இறைச்சியில் இரும்பு சத்து அதிகமாக நிறைந்துள்ளது. உடலில் இரத்த அளவானது குறைவாக இருப்பதால் இரத்த சோகையாக பிரச்சனை ஏற்படும். ஆகவே இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாட்டிறைச்சியை சாப்பிட்டு வர இரத்த சோகை என்ற நோய் குணமாகும்.

மூளை மற்றும் நரம்பு மண்டலம்:

மாட்டிறைச்சியில் வைட்டமின் பி12 என்ற சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இதில்  சிவப்பு இரத்த அணுக்கள் அதிகமாக நிறைந்துள்ளதால் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரும் உதவியாக இருக்கிறது.

தோல் சுருக்கம் குணமாக:

வயதாகிவிட்டாலே அனைவருக்கும் தசை இழப்பு, தோல் சுருங்கி போய் காணப்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்தான். மாட்டு இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தசை இழப்பு, தோல் சுருக்கம் போன்ற பிரச்சனையிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சால்மன் மீன் நன்மைகள்

உடல் சோர்வு நீங்க:

நாள் முழுவதும் வேலை பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு உடலானது அதிக சோர்வுடன் இருப்பார்கள். அதிகமாக வேலை பார்ப்பவர்கள் உணவில் மாட்டிறைச்சியை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் களைப்பை நீக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

மாட்டிறைச்சி நன்மைகள்: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மாட்டிறைச்சி பெரிதும் உதவுகிறது. மேலும் இதயத்தை எந்த வித பாதிப்பும் அடையாமல் பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டு இறைச்சி சிறந்த உணவாகும்.

நியாசின் குறைபாடு நீங்க:

உடலில் குறைந்த அளவு நியாசின் (வைட்டமின் பி3) உள்ளவர்கள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க நீங்கள் நியாசின் நிறைந்த மாட்டு இறைச்சியை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஹார்மோன் சுரப்பி அதிகரிக்க:

beef uses in tamil: மாட்டு இறைச்சியில் இருக்கக்கூடிய புரதச்சத்துக்கள் தசைகளை வலுவடைய செய்கிறது. மேலும் உடலில் ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதற்கும் உதவுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil