மாட்டு கறி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..! | யார் சாப்பிடக்கூடாது தெரியுமா.?

Advertisement

Beef Disadvantages in Tamil | Who Should Not Eat Beef in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மாட்டு இறைச்சி சாப்பிடுவதால் உடலில் என்னென்ன தீமைகள் உண்டாகும் என்பதனை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக அசைவ உணவுகளில் மீன், ஆடு, கோழி தான் விரும்பி சாப்பிட்டு கொண்டிருந்தோம். ஆனால், இப்போது பன்றி கறி, வாத்து கறி மட்டும் மாட்டு கறி என அனைத்து அசைவ உணவுகளையும் சாப்பிட்டு வருகிறோம். ஏனென்றால் இதுபோன்ற அசைவ உணவுகளில் அதிக அளவில் சத்து நிரம்பியுள்ள்ளது என்பதற்காக. இருந்தாலும், எந்த வகையான அசைவ உனவுகளை சாப்பிட்டு வந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும். அந்த வகையில் நீங்கள் மாட்டு கறியை அதிகம் விரும்பி சாப்பிடுபவராக இருந்தால் அதனால் என்னென்ன பக்கவிளைவுகள்/தீமைகள் வருகிறது. வருகிறது என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்.

மாட்டு இறைச்சியில் உள்ள சத்துக்கள்:

  • கலோரி
  • வைட்டமின்
  • புரதம்
  • கொழுப்பு
  • இரும்பு
  • மினரல்
  • சிங்

மாட்டு இறைச்சியில் இதுபோன்ற சத்துக்கள் அதிக அளவில் நிரம்பியுள்ளது. முக்கியமாக மாட்டு இறைச்சியில் அதிக அளவில் கலோரி நிறைந்துள்ளது.

மாட்டு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மாட்டு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

Who Should Not Eat Beef in Tamil

இதய பிரச்சனை: 

மாட்டு இறைச்சியில் அதிக அளவில் கொழுப்புசத்து நிறைந்துள்ளதால், இதனை அதிகமாக சாப்பிடும்போது உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்து இதயம் தொடர்பான பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. எனவே, இதயநோய் பிரச்சனை உள்ளவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இரத்த ஓட்டத்தை தடுக்கும்:

உடலில் அதிக அளவில் மாட்டு இறைச்சி கொழுப்பானது சேரும்போது உடல் தமனிகளில் உறைந்து தங்கி ரத்த ஒட்டத்தை தடுக்க வாய்ப்புள்ளது. இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.

புற்றுநோய்க்கு வழிவகுக்கும்:

மாட்டு இறைச்சியில் கார்சினோஜென் (Carcinogen) உள்ளது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே, அளவுக்கு அதிகமாக மாட்டு கறியை சாப்பிடுவதால் உடலில் அதிக அளவில் கார்சினோஜென் உண்டாகும். கார்சினோஜென் அதிகமானால் உடலில் புற்றுநோய் ஏற்ப்படும்.

உடல் எடை அதிகரிக்கும்:

மாட்டிறைச்சியில் அதிக அளவில் கலோரி உள்ளது. எனவே, இதனை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. எனவே, உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மாட்டு இறைச்சியை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் பிராய்லர் கோழி சாப்பிடுபவர்களா.! அப்போ அது நல்லதா.! கெட்டதா.!

வாழ்நாள் குறையும்:

மாட்டு இறைச்சியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாள் குறையும் என்று கூறப்படுகிறது. எனவே, மாட்டு கறியை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Who Should Not Eat Beef in Tamil: | மாட்டு இறைச்சி யார் சாப்பிடக்கூடாது.?

  • உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிட கூடாது.
  • இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிட கூடாது.
  • புற்றுநோய் உள்ளவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிட கூடாது.
  • இரத்த ஓட்டம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிட கூடாது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement