வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

Advertisement

Benefits Drinking Ladyfingers Soaked Water in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நாம் சாப்பிடும் அனைத்து காய்கறிகளும் பல வகையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

நாம் இந்த காய்கறிகளை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே எந்த நோய்களும் நம்மை நெருங்காது. அதுபோல வெண்டைக்காயில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. அதேபோல் வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை குடித்து வருவதால் என்ன நன்மைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வெண்டைக்காய் பயன்கள் | Ladies Finger Health Benefits in Tamil

வெண்டைக்காய் ஊறவைத்த நீரின் நன்மைகள்:

வெண்டைக்காய் நீரின் பயன்கள்

வைட்டமின் C, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம் மற்றும் இரும்பு சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன.

வெண்டைக்காய் ஊறவைத்த நீர் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த வெண்டைக்காயை நீரில் ஊறவைத்து அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதை பற்றி பார்ப்போம்.

இரத்தசோகை குணமாக:  

இரத்தசோகை குணமாக

வெண்டைக்காயில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இது இரத்தசோகை நோயை குணப்படுத்துகிறது. இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் இரத்த செல்கள் உற்பத்தி ஆகின்றன. அதுபோல இரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது.

சுவாச கோளாறு நீங்க:

சுவாச கோளாறு நீங்க

வெண்டைக்காய் ஊறவைத்த நீர் சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் மருந்தாக பயன்படுகிறது. இந்த நீரை தொடர்ந்து குடித்து வருவதால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த:

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த

வெண்டைக்காயில் இன்சுலின் அளவு அதிகளவில் காணப்படுகின்றன. சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் இந்த நீரை தொடர்ந்து குடித்து வருவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

வயிற்று கோளாறுகளை தடுக்க:

வயிற்று கோளாறுகளை தடுக்க

இந்த வெண்டைக்காய் நீரை தினமும் காலையில் குடித்து வருவதால் வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்கிறது. வயிற்று வலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளை சரி செய்கிறது.

மேலும் இந்த நீர் பசி உணர்வை தூண்டுகிறது. பசி எடுக்கவில்லை என்று கூறுபவர்கள் இந்த நீரை குடித்து வந்தால் நல்ல பலனளிக்கும்.

வீட்டுல வெண்டைக்காய் இருந்தால் இதை செய்து பாருங்கள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement