தினமும் வீட்டில் சமைக்கும் சவ்சவ் வில் இத்தனை நன்மைகள் உள்ளதா..!

Advertisement

Benefits of Chow Chow  

பொதுவாக காய்கறிகள் என்றாலே அதில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் நம் வீட்டில் உள்ள தாய்மார்கள் நம்மை எப்போதும் காய்கறியினை சாப்பிடச் சொல்வார்கள். என்ன தான் அவர்கள் தினமும் சொன்னாலும் கூட அதனை நாம் யாரும் பெரிதாக நினைப்பது இல்லை. ஒரு வேலை அப்படி காய்கறியினை சாப்பிட்டாலும் கூட அதில் நமக்கு பிடித்த காய்கறியினை மட்டும் தான் சாப்பிடுவோம். இப்படி இருந்து வரும் நிலையில் நம்முடைய வீட்டில் தினமும் சமைக்கும் சாப்பாட்டில் சில காயினை மட்டும் ஏதாவது ஒரு முறை சமைத்து வைப்பார்கள். அத்தகைய காயில் சவ்சவ்வும் ஒன்று. ஆகையால் தினமும் நாம் சாப்பிடும் சவ்சவ் வில் உள்ள நன்மைகள் என்னென்ன மற்றும் அதில் உள்ள சத்துக்கள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ சுரைக்காயின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.. 

சவ்சவ் வில் உள்ள சத்துக்கள்:

 தினமும் நம்முடைய உணவில் சேர்த்து கொள்ளும் 100 கிராம் சவ்சவ் வில் 5.4% புரதம், 4.8% பாஸ்பரஸ், 17.8% கார்போஹட்ரேட், 6.7% சுண்ணாம்புச்சத்து, 9% மாங்கனீசு, 10.5% போலேட் மற்றும் 10.7% ஸ்டார்ச் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. 

மேலும் இது மட்டும் இல்லாமல் சவ்சவ் வில் வைட்டமின் A, வைட்டமின் B மற்றும் வைட்டமின் C  சத்துக்களும் உள்ளது.

சவ்சவ் நன்மைகள் 

கல்லீரலின் செயல்பாடு:

கல்லீரலின் செயல்பாடு

நாம் சாப்பிடும் சவ்சவ் வில் உள்ள சத்தானது கல்லீரல் படிந்துள்ள கொழுப்பினை கரைய செய்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு காயாக உள்ளது. கொழுப்பினை கரைய செய்வதோடு மட்டும் இல்லமால் நம்முடைய கல்லீரலின் செயல்பாட்டையும் சிறப்பாக நடைபெற செய்வதற்கு உதவியாக உள்ளது.

பெண்கள் கர்ப்பம்:

பெண்கள் கர்ப்பம்

பொதுவாக பெண்கள் சாதாரணமாக இருக்கும் நிலையினை விட கர்ப்பமாக இருக்கும் போது அவர்களுக்கு மேலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. அதிலும் குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு போலேட் சத்து அதிக அளவில் தேவைப்படுகிறது.

இத்தகைய போலேட் சத்தானது சவ்சவ் வில் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான சத்தினை அளித்து ஆரோக்கியமாக இருக்க செய்கிறது.

செரிமானம்: 

செரிமானம்

சவ்சவ் ஆனது ஒரு நீரின் காய் என்று சொல்லலாம். இந்த சவ்சவ்வினை நாம் உணவுடன் சேர்த்து சாப்பிடும் போது செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்க செய்கிறது. மேலும் உணவினை எளிய முறையில் செரிமானம் ஆகச் செய்கிறது.

கருப்பை வாய் புற்றுநோய்:

கருப்பை வாய் புற்றுநோய்

சவ்சவ்வினை நாம் சாப்பிடும் போது நிறைய சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு வரும் கருப்பை வாய் புற்றுநோயினை உருவாக்கும் செல்களை அழித்து ஆரோக்கியமாக வாழச் செய்யும்.

சர்க்கரை அளவை குறைக்க:

சர்க்கரை அளவை குறைக்க

இதில் உள்ள கார்போஹட்ரேட் ஆனது உடலின் சக்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கவும் மற்றும் இரத்த அழுத்தத்தினை சமநிலையில் வைப்பதற்கும் உதவுகிறது.

மேலும் இந்த சவ்சவ் ஆனது ஞாபகம் சக்தியினை அதிகரிக்கவும், உடல் எடையினை குறைக்கவும் மற்றும் நம்முடைய முகத்தை பளபளப்பாகவும் மென்மையாகவும் வைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்⇒ காலிபிளவரை சாப்பிடுவதற்கு முன்பு நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement