வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பெண்கள் தலை சீவுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா…! புதுசா இருக்கே..!

Updated On: December 31, 2022 7:57 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

தலை வாருதல்

நாம் காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை நமக்கு வேலைகள் எப்போதும் இருந்து கொண்டே தான். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு சொல்ல முடியாத அளவிற்கு வேலைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். பெண்கள் அந்த வேலையும் பார்த்து கொண்டு இடையில் குளிப்பது தலை வாருதல் போன்றவற்றையும் செய்ய வேண்டும். அதில் சிலருக்கு தலை வார நேரம் இல்லாமல் இருக்கும் மற்றும் சிலருக்கு தலை வார பிடிக்காமல் முடியை அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் தலை வாருவது தானே இன்று இல்லை என்றால் என்ன நாளை கூட வாரிக்கொள்ளலாம் என்று அலட்சியமாக நினைக்காதீர்கள். பெண்கள் முடியை வாருவதில் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ முடி வளர்ச்சிக்கும், சரும பிரச்சனைக்கும் இந்த ஒரு பழம் போதுமா.!

பெண்கள் கூந்தலை வாருவதினால் ஏற்படும் நன்மைகள்:

தலை வாருதல்

தினமும் சாப்பிடுதல், குளித்தல் மற்றும் பல்துலக்குதல் போன்ற வேலைகள் எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவிற்கு கூந்தலை வாருதலும் முக்கியம். 

நீங்கள் தினமும் கூந்தலை வாருவதினால் உங்கள் தலையில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த சரும செல்கள் ஆகியவற்றை வெளியேறி முடியை அடர்த்தியாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்க வைக்கிறது. 

 பெண்கள் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை கூந்தலை வார வேண்டும் என்று ஆய்வின் படி சொல்லபடுகிறது. ஏனென்றால் சீப்பினால் நம்முடைய கூந்தலை சீவும்போது உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடியை ஆரோக்கியமாக வளர செய்கிறது.  

கூந்தலை நாம் வாரும்போது நமது உச்சந்தையில் இருக்கும் செபேசியஸ் சுரப்பிகள் சுரக்கப்ட்டு சீவம் என்ற எண்ணெயை உற்பத்தி செய்து முடியை இயற்கையாகவே வளர செய்யும்.

அதிலும் குறிப்பாக பெண்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை கூந்தலை வாரினால் சேபேசியஸ் சுரப்பிகள் மேலும் தூண்டப்பட்டு அது முடியின் ஆழம் வரை சென்று உங்களுடைய முடியின் வளர்ச்சியை நன்றாக அதிகரிக்க செய்யும். 

நாம் ஒவ்வொரு நாளும் கூந்தலை வாருதல் என்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கும் மற்றும் முடி வளர்ச்சிக்கும் மிகவும் நன்மையை அளிக்கிறது.

அதனால் ஒரு போதும் கூந்தலை வார மறக்காமல் தினமும் கூந்தலை வாருங்கள்.

பின் விளைவுகள்:

தலை சீவுதல்

நாம் நம்முடைய கூந்தலை வாராமல் அப்படியே விட்டு விட்டால் முடி கொட்டுதல், முடியின் அடர்த்தி குறைதல் மற்றும் முடி வளருவதில் பிரச்சனை போன்ற பின் விளைவுகள் ஏற்படும்.

அதனாம் கட்டாயமாக ஒரு நாளைக்கு 1 அல்லது அதற்கும் மேற்பட்ட முறை கூந்தலை வரலாம்.

இதையும் படியுங்கள் ⇒ தலைமுடி வளர்ச்சிக்கு முட்டையை இப்படி பயன்படுத்துங்கள்..!

இதுபோன்ற மேலும் பல ஆரோக்கியகுறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..!
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now