உடல் மற்றும் மனம் சார்ந்த 17 பிரச்சனைக்கு தினமும் இந்த ஒன்னு போதும்!

Advertisement

Benefits of Drinking Water in Tamil

தினமும் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லதென்று அனைவருக்கும் தெரியும். நமது உடலும் 70% தண்ணீரால் ஆனது. இதன் காரணமாக தான் இந்த உலகில் உணவு இல்லாமல் கூட சில நாட்கள் வாழ முடியும். ஆனால் தண்ணீர் இல்லமால் நம்மால் ஒருநாளும் இருக்க முடியாது. உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதினால் உடல் புத்துணர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துவதினால் 17 வகையான உடல் சார்ந்த பிரச்சனைகள் குணமாக்குகின்றன. சரி இந்த பதிவில் தண்ணீர் அருந்துவதினால் என்னென்ன பிரச்சனைகள் குணமாக்குகின்றன. ந்மது உடல் எடைக்கு ஏற்றவாறு தினமும் நாம் எவ்வளவு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் போன்ற விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 17 நன்மைகள் | 17 Benefits of Drinking Water in Tamil

1. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் அதிகளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது.

2. முதுகுவலி வராமல் தடுக்கிறது.

3. மூட்டுகளுக்கு சப்போர்ட்டாக இருக்கிறது.

4. உடலில் ஏற்படும் தசை பிடிப்புகளை தடுக்கிறது.

5. தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது.

6. தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைத் தடுக்கிறது.

7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

8. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

9. தசைகளுக்கு சப்போர்ட்டாக இருக்கிறது.

10. உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் தினமும் அருந்திவருவதன் மூலம் உங்கள் சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ளலாம்.

11. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் உங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறைவதற்கு தண்ணீர் சப்போர்ட்டாக இருக்கும்.

12. உடலை ஆற்றலுடனும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும்.

13. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதலுக்கு தண்ணீர் உதவுகிறது.

14. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

15. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதை அதிகரிக்கிறது.

16. இரத்தம் மற்றும் ஆக்சிஜன் சுற்றோட்டம் உடல் முழுவதும் சீராக செயல்பட உதவி செய்கிறது.

17. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

உடல் எடைக்கு ஏற்ப ஒரு நாளுக்கு எத்தனை கிளாஸ் தண்ணீர் அருந்தலாம்?

உடல் எடை  ஒரு நாளுக்கு தண்ணீர் அருந்துவதற்காக அளவு
9 kg 1 கிளாஸ் 
18 kg  2 கிளாஸ் 
27 kg   3 கிளாஸ் 
36 kg  4 கிளாஸ் 
45 kg  5 கிளாஸ் 
54 kg  6 கிளாஸ் 
63 kg  7 கிளாஸ் 
72 kg  8 கிளாஸ் 
81 kg  9 கிளாஸ் 
90 kg  10 கிளாஸ் 
99 kg  11 கிளாஸ் 
108 kg  12 கிளாஸ் 
117 kg  13 கிளாஸ் 
126 kg  14 கிளாஸ் 
135 kg  15 கிளாஸ் 

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நீங்கள் குடிக்கும் தண்ணீரில் எந்த தண்ணீர் நல்லது என்று தெரியுமா.?

உடல் எடைக்கு ஏற்ப ஒரு நாளுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்தலாம்?

உடல் எடை  லிட்டர் 
45 kg 1.9 லிட்டர்
50 kg  2.1 லிட்டர்
55 kg   2.3 லிட்டர்
60 kg  2.5 லிட்டர்
65 kg  2.7 லிட்டர்
70 kg  2.9 லிட்டர்
75 kg  3.2 லிட்டர்
80 kg 3.5 லிட்டர்
85 kg 3.7 லிட்டர்
90 kg 3.9 லிட்டர்
95 kg 4.1 லிட்டர்
100 kg 4.3 லிட்டர்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement